Monday 22 April 2024

சுயநலத்தை விடு.

 சுயநலத்தை விடு.

*மனத்தின் சக்தி
கூடுதலாக என்ன செய்ய வேண்டும். *
மனம் அமைதியாக இருக்க வேண்டும். அமைதிக்கு மனதில் பிளவு இல்லாது இருக்க வேண்டும். சரி-தவறு, நல்லது-கெட்டது என்கிற பேதங்கள் அற்று இருத்தல் அவசியம். பேதங்கள் இருக்க வெறுப்பாலும், விருப்பாலும் மனசு அலைக்கழிக்கிறது. படபடப்பாகிறது. படபடப்பு சக்தி விரயம்.
சிலதை வெறுக்கவும்
சிலதை விரும்பவும்
வாழ்க்கை கற்றுக் கொடுக்கிறது.
அவை சாதாரண மனிதர்களுக்கு எந்தச் சலனமும் இல்லாதிருத்தலே நலம்.
சலனத்தில் நல்ல சலனம், கெட்ட சலனம் என்று பிரிவில்லை. எல்லாச் சலனங்களும் தவறு தான்.
சலனமற்றிருத்தலே உத்தமம்.
எண்ணங்கள் தான் மனித வாழ்க்கையைத் திட்டமிடுகின்றன.
இது வேண்டும் அது வேண்டும், இப்பொழுது வேண்டும்-இப்பொழுது வேண்டாம் எற்று ஓயாது கட்டளைகள் ஏற்படுத்துகின்றன. *இந்தக் கட்டளைகளைச்
செயல்படுத்தும் விதமே. *
*பொன்மொழிகள்👏*
1. கருணை நிறைந்த செயல்களே இறைவனை கவரும்.
2. தீமையில் இருந்து தடுத்து மனதை நல்வழிப்படுத்தும் வழியே கடவுள் வழிபாடு.
3. கல்லில் மட்டும் கடவுள் இருப்பதாக கருத வேண்டாம். ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்து உயிர்களும் கடவுளின் வடிவமே.
4. தெய்வமே துணை என்று இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் கடமையாற்றுவதில் கண்ணாக இருப்பர்.
5. உள்ளத்தை கடவுளுக்குப் பலியாக கொடுத்து விடுங்கள். அதுவே சிறந்த யாகம்.
6. இறைவனை முழுமையாக நம்பு.. உண்மையை மட்டும் பேசு.. உனக்கு எதிலும் வெற்றியே உண்டாகும்.
7. பக்தி பக்குவம் அடையும் போதுதான், தெய்வம் கேட்ட வரத்தைக் கொடுக்கும்.
8. சுயநலத்தை விடு, தெய்வத்தை பூரணமாக நம்பு. உண்மையை மட்டும் பேசு. நியாயத்தைப் பின்பற்று.
9. நம்முடைய விருப்பப்படி உலகில் எல்லாம் நடப்பது இல்லை. தெய்வத்தின் விருப்பப்படியே உலகம் இயங்குகிறது.
10. உண்மையான பக்தி இருந்தால் மட்டுமே மனம் தைரியமாக இருக்கும். தைரியம் இருந்தால் மட்டுமே உண்மையான பக்தி ஏற்படும்.
11. கடவுள் ஒருவரே. அவர் மட்டுமே உண்மையானவர். அவரை பலரும் பலவிதமான பெயர்களில் அழைக்கிறார்கள்.
12. எல்லாம் வல்ல இறைவன் நம்மை காப்பான் என்று மனதிற்குள் எப்போதும் சொல்லிக் கொண்டால் இன்பம் பெருகும்.
13. உதவும் மனப்பான்மை
இல்லாதவன் செலுத்தும் தெய்வ பக்தி வெறும் வேஷமே.
14. கற்சிலையில் மட்டுமல்ல, உலகில் எல்லா உயிர்களும் கடவுளின் வடிவங்களே.
15. உலகம் என்னும் உடம்பை உயிராக இருந்து இயக்குபவர் கடவுளே.
16. கடவுளை நம்பிச் சரணடைந்தால் அவர் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை.
17. கடவுளுக்கு நிகராக வாழ வேண்டுமென்றால் மற்றவர்களை ஏமாற்ற கூடாது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டாலே போதும்.
18. இயற்கையும் இறைவனும் ஒன்றே. நிலம், நீர், தீ, காற்று, வானம்,
என அவரே எல்லாமுமாக இருக்கிறார்.
19. ஈரமில்லாத மனம் படைத்தவன் இறைவனைக் காண முடியாது. எதிரிக்கும் உதவும் இரக்கம் வேண்டும். மனதில் பாரம் இருந்தால் அதை இறைவனின் தலையில் இறக்கி வைத்து விடுங்கள்.
20. உன் மீது நம்பிக்கை வைக்காமல் ஆயிரம் கடவுள்கள் மீது நம்பிக்கை வைத்துப் பயனில்லை.
21. உண்டியலில் காசு போட்டு விட்டான் என்பதற்காக கடவுள் ஒருவரையும் காப்பாற்ற மாட்டார்..
போட்டதற்காக இன்னொருவனை தண்டிக்கவும் மாட்டார்.
22. நீ தேடும் கடவுள் உனக்குள்ளே தான் இருக்கிறார்.
23. உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய துன்பம் என்று இறைவனிடம் சொல்லாதே, உனக்குத் துணையாக இருப்பவர் எவ்வளவு பெரிய இறைவன் என்று அந்த துன்பத்திடம் சொல்.
24. உன்னால் இங்கு எதுவும் ஆகாது என உணர்ந்து கொள்.. உன் இறைவன் தான் உன்னை காப்பான் என்று நம்பு.
25. ஏழைகளை அழ வைத்து அழகு பார்ப்பவன் இறைவன்.. அந்த அழும் நிலையிலும் இறைவனை அழகுபடுத்திப் பார்ப்பவன் ஏழை.
26. உன் துன்பங்களை இறைவனிடம் மட்டுமே சொல்லி அழு.. ஏனெனில் அவர் மட்டும்தான் அதை வேறு யாரிடமும் சொல்லி சந்தோசப்பட மாட்டார்.
27. தாய்
உணவு ஊட்டி வளர்க்கிறாள்.. ஆண்டவன்
சோதித்து வளர்க்கிறான்.

No comments:

Post a Comment