Monday 8 April 2024

நேற்று காலை நடைபெற்ற தியாகராஜர் கலைக் கல்லூரி 75 ஆம் ஆண்டு பிளாட்டினம் ஜூப்ளி விழா.

 நேற்று காலை நடைபெற்ற

தியாகராஜர் கலைக் கல்லூரி 75 ஆம் ஆண்டு பிளாட்டினம் ஜூப்ளி விழா.
இன்று காலை
தியாகராஜர் கலைக் கல்லூரி 75 ஆம் ஆண்டு பிளாட்டினம் ஜூப்ளி விழா
டாக்டர் ராதா தியாகராஜன் அரங்கத்தில் கல்லூரித் தலைவர்
திருமதி உமா கண்ணன்
தலைமையில் நடைபெற்றது.
கல்லூரிச் செயலாளர் கருமுத்து
க. ஹரி தியாகராஜன் வரவேற்புரை மற்றும் கடந்து வந்த பாதைகள் குறித்துப் பேசினார்.
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு
கண்காட்சியைத் திறந்து வைத்து நமது தேசத்தின் மேன்மையான கல்வி மற்றும் வாழ்வியல் குறித்து
விழாப் பேருரை ஆற்றினார்.
ராயலா கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் ரஞ்சித் பிராதப்
வாழ்த்துரை வழங்கினார்.
சாதனை படைத்த முன்னாள் மாணவர்கள், வெற்றிகரமான தொழிலதிபர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என
பாலம் கல்யாண சுந்தரம், பென்குயின் அன்புக்கனி, மிருதுளா ரமேஷ், டாக்டர் நம்பெருமான்சாமி, பிரேமலதா பன்னீர்செல்வம் செல்வம் உள்ளிட்ட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மனிதத்தேனீ, அருட்செல்வர்
எஸ். சீத்தாராமன், புலவர் கி. வேலாயுதன், முனைவ‌ர் மு. அருணகிரி, டாக்டர் ஏடி. தியாகராஜன், லெட்சுமி முருகேசன், டீன் மற்றும் துறைத் தலைவர் ஆர்எம். முருகப்பன், அபிராமி என்ற ஒப்பிலாள் ஹரி தியாகராஜன், பேராசிரியர் காந்திதுரை, செல்வகுமார், பி கேஎம். செல்லையா, கருமுத்து சு. சேது உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
மிக நேர்த்தியாக
கல்விப்பணியில் தனித் தன்மையுடன் அட்மிஷன் மற்றும் அப்பாயின்மென்ட் என எதற்கும் துளியும் பணம் பெறாமல் நடத்தும் கலைத் தந்தையின் வழியில்
அண்ணன் கருமுத்து தி. கண்ணன் அவர்களது அருந் தவப் புதல்வர்
கருமுத்து க. தியாகராசன்
இதனை நடத்தி வருவது வணங்குதற்குரிய பணி. வாழிய கலைத் தந்தையின் நற்குடும்பம் வாழியவே.



































No comments:

Post a Comment