Monday 8 April 2024

வறுமை வெறுமை .

 வறுமை வெறுமை . .

_*உன்னை யார் உருவாக்கினார் என்பதை விட நீ எத்தனை பேரை உருவாக்கினாய் என்பதே உன் வரலாறு.*_
_*உனக்கென்று ஒரு பாதை வகுத்துக் கொள்.அதில் நீயே ராஜாவாக இரு... சிப்பாய்கள் தானாகச் சேர்வார்கள்.*_
_*தேடலுடன் காலை பயணம்...*_
_*பயணம் வெற்றியில் முடியுமா தோல்வியில் முடியுமா என்று தெரியாது...*_
_*இருந்தும் பயணத்தை கைவிடாமல் தொடர்கிறேன் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு.*_
_*நம் அனுபவத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் இன்பம் நிரந்தரமானதாக இருக்கும். அதேபோல நம் அனுபவத்தில் இருந்து நமக்குத் துன்பம் கிடைக்கும் பட்சத்தில் நாம் அடுத்த முறை அந்தத் துன்பம் ஏற்படாத வண்ணம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.*_
மருத்துவர் ஒரு பெண்மணிக்குச்
சில மருந்துகளைப்
பரிந்துரைத்து விட்டு, நீங்கள் இதை விடாமல் தொடர்ந்து
சாப்பிட வேண்டும் என்கிறார்.
எவ்வளவு காலம் டாக்டர்,
*"நான் சாகும் வரை"* இதெல்லாம் சாப்பிடணுமா என்று கேட்கிறார்
அந்தப் பெண்மணி.
டாக்டர்கூறுகிறார்,
*"நீங்கள் வாழும் வரை"* என்று.
சாகும் வரை, வாழும்வரை என்ற இரு வாக்கியங்களும்
ஒரே பொருளைத் தான் குறிக்கின்றன.
ஆனால்,
சாகும் வரை என்பதில்
ஒரு அதிருப்தி, அச்சம் தரும் ஓர் "எதிர்மறை எண்ணம்" எழுகிறது.
ஆனால், வாழும் வரை என்ற சொற்களில் ஆறுதல் தரும் "நேர்நிலை எண்ணம்" ஏற்படுகிறது.
வாழுகின்ற
வார்த்தைகளும் உண்டு,
வீழுகின்ற
வார்த்தைகளும் உண்டு…
சொற்களில் என்ன இருக்கிறது,
அதைப் புரிந்து கொள்வதில் தானே இருக்கிறது,..
என்று வாதாடலாம்.
ஆனால், சில வார்த்தைகள் ரணப்படுத்தும்,
சில வார்த்தைகள்
குணப்படுத்தும்.
வார்த்தைகள்
ஊக்குவிக்கவும் செய்யும்,
சோர்ந்து போக வைக்கவும் செய்யும்…
அந்தளவுக்கு வார்த்தைகளுக்கு வலிமை உண்டு.
_*யானையை எளிதில் வரைந்து விடலாம்.*_
_*எறும்பை வரைவதே கடினம்..*_
_*சின்னச்சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் பெரிய வெற்றி கிடைக்கும்.*_
_*எதுவுமே தன்னிடம் இல்லை என்பதே வறுமை.*_
_*எல்லாம் இருந்தும் இல்லாதது போன்று உணர்வது வெறுமை.*_

No comments:

Post a Comment