Monday 8 April 2024

வீழ்வதும் வீழ்த்துவதும்

 வீழ்வதும் வீழ்த்துவதும் . .

*கவலை அது ஒரு*
*ஆடும் நாற்காலி..*
*ஒரே இடத்தில்*
*ஆடுமே தவிர,*
*எங்கும் கொண்டு*
*செல்லாது!*
*அறிவுள்ள முடிவு தான் தீர்மானம் ...*
*அறிவற்ற முடிவு தான் பிடிவாதம் ...*
*இரண்டில் ஒன்றை நீயே தீர்மானிக்க வேண்டும் ...*
முடியாது என்ற வார்த்தை
இயலாதவர்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று.
முடியாதவர்கள் தான் அடுத்தவர்களைப் பற்றி விமர்சிப்பார்கள்.
முடியும் என நினைப்பவர்கள் அடுத்தததை
நோக்கிப் பயணிப்பார்கள்.
எப்போதும் நம்முடன் போட்டி போட ஒருவர் இருந்தால் தான்
நாம் வேகமாகப் பயணிக்க முடியும்.
அது விளையாட்டானாலும் சரி, வாழ்க்கையானாலும் சரி.
நம்பிக்கை இல்லாதவர் வாழ்வது கடினம். நம்பிக்கையோடு இருப்பவர் வீழ்வதும் கடினம்
வீழ்த்துவதும் கடினம்.
_*அழகு என்பது அறம் சார்ந்தது என்றில்லாமல்*_
_*நிறம் சார்ந்தது என்றானது.*_
_*வாய்மை என்பது வாழும் வாழ்க்கை*_ _*என்றில்லாமல் வெற்று வார்த்தை என்றானது…*_
_*உதவி என்பது*_
_*பிறருக்கான நன்மை*_ _*என்றில்லாமல் நமக்கான விளம்பரம் என்றானது…*_
_*எளிமை என்பது*_
_*எடுத்துக்காட்டு*_ _*என்றில்லாமல்*_
_*ஏய்க்கப்பட என்றானது…*_
_*மரியாதை என்பது*_
_*உன்னத உள்ளத்திற்கு என்றில்லாமல் உடுத்தும் உடைக்கு என்றானது…*_
_*ஏமாற்றுதல் என்பது*_
_*சமூகத்தின் அவலம்*_ _*என்றில்லாமல்*_
_*சாமர்த்தியத்தின் அளவீடு என்றானது…*_
_*சம்பாத்தியம் என்பது*_
_*சராசரி விசயம்*_ _*என்றில்லாமல்*_
_*சந்தோஷத்தின் அவசியம் என்றானது…*_
_*அவ்விதம் அடுக்கிக்*_
_*கொண்டே*_ _*போகின்றது,*_
_*அன்றாட வாழ்வில்*_
_*அழுக்கான*_ _*அர்த்தங்கள். *_

No comments:

Post a Comment