Monday 15 April 2024

ஆனந்த வாழ்க்கை .

 ஆனந்த வாழ்க்கை .

_*அன்பையும்*_ _*மரியாதையையும்*_
_*தயங்காமல்*_ _*ஒவ்வொருவருக்கும்*_
_*கொடுப்பவன்*_
_*இந்த உலகத்தில்*_
_*எதையும் சாதித்து விடுவான்.*_
*_பந்தயக் குதிரை ஓடும் போது அருகிலுள்ள புல்லையோ, கொள்ளையோ பார்ப்பதில்லை.._*
*_ஏனெனில் அது தன் வெற்றி இலக்கை மட்டுமே மனதில் கொண்டு ஓடுகிறது..._*
_*நிஜமானது ஏமாற்றாது.........*_
_*ஏமாற்றுவது நிஜமானதல்ல..........*_
_*" அன்பு "*_
_*சந்தோஷம் என்பது யாதெனில் வண்ணத்துப்பூச்சி மாதிரி...........*_
_*அதை நாம துரத்தினா ஒடி ஒளிஞ்சிக்கும்...........*_
_*அதை கண்டுக்காம விட்டுட்டா அதுவா வந்து நம்ம கையில் அமரும்.*_
அற்புதங்கள் அது நம்புபவர்களுடைய நம்பிக்கையின் அளவைப்
பொறுத்தே நிகழ்கிறது."
இதை இன்னும் விளக்கமாகப் பார்க்கலாம்.
இப்பிரபஞ்ச இயக்கமே
அதிர்வுகளால் தான் நடக்கிறது என்பதை அனைவரும் அறிவோம்.
ஆனால், அந்த அதிர்வுகளைப் பயன்படுத்தி நம்மால் வெற்றிபெற முடியுமா, அல்லது அந்த அதிர்வுகளை எப்படி நாம் பயன்படுத்த வேண்டும், நம்மால் அது முடியுமா , என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் தான் நமக்குத் தெரியாமலேயே உள்ளது.
நமக்குத் தெரியவில்லை என்பதற்காக அந்த அதிர்வுகள் நம் வாழ்க்கையில் வேலை செய்யாமலா இருக்கும்.
நம்முடைய அதிர்வுகள் எப்படி உள்ளதோ அப்படியே தான் இதுவரை நம் வாழ்க்கையும் நகர்ந்து வந்துள்ளது. இனியும் நம் அதிர்வுகளுக்கு ஏற்றபடியே தான் நம் வாழ்க்கையும் அமைய உள்ளது.
நம்முடைய அதிர்வுகள் அபரிமிதமாக இருந்தால் நம்முடைய வாழ்க்கையும் அபரிமிதமாகவே மாறிவிடும்.
அந்த அதிர்வுகள் நம் வாழ்க்கையில் எப்படி வேலை செய்கிறது என்பதை அடுத்ததாகப் புரிந்துகொள்வோம்.
நமது ஆழ்மனம் இருக்கும் பொழுது நமது எண்ணங்கள் அல்லது உணர்வுகள் அபரிமிதமாக இருக்கும் எனில் நம் வாழ்க்கையும் அபரிமிதமாகவே இருக்கும் என்று பலரும் நிரூபித்து உள்ளனர்.
எனவே, நமது எண்ணங்கள் மற்றும் நமது உணர்வுகளை சரியாகக் கவனிக்க, புரிந்துகொள்ள மற்றும் அவற்றை சரியாகக் கையாளக் கற்றுக்கொண்டால் மட்டுமே நம்மால் அபரிமிதமாக வாழ முடியும் என்கிற நம்பிக்கை நமக்கே தோன்றும்.
நம்மால் முடியும் என்பதை நாம் முழுமையாக நம்பினில் நம் வாழ்க்கையில் அற்புதங்கள் தானாகவே நிகழத் தொடங்கும்.
நம்மால் நிச்சயமாக அபரிமிதமான வாழ்க்கையை வாழ முடியும்.
அந்த கணத்தில் இருந்து நம் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிகழ்வதை கண்டு நாமே வியப்படைவோம்.
ஏனென்றால், அற்புதங்கள் தானாக நிகழ்வதில்லை. அது நம் நம்பிக்கையின் அளவைப் பொறுத்தே நிகழ்கிறது.
_*நமக்கு சில பதில்கள் தெரிந்து இருந்தாலும், புரிதல் இல்லாதவர்கள் முன் மௌனமாக இருப்பதே நம் உயரிய பண்பாகும்.*_
_*கரை சேர்க்கும் கப்பலுக்குத் துணையாவோம் துடுப்பெனவே,*_
_*ஒருவருக்கொருவர் அனைவருமே நாம் கொடுத்து வாங்கும் கொள்கையுடன், நல்லுறவு கொண்டிருப்போம்,*_
_*உள்ளம் ஒன்றி மகிழ்ந்திருப்போம்.*_
_*எளிமை என்பது எதன் மீதும் ஏக்கம்*_
_*கொள்ளாதிருப்பது அல்ல,*_
_*எது*_ _*இருக்கிறதோ,அதனை அந்த நேரத்தில் ஏற்றுக் கொண்டு*_
_*ஆனந்தமாய் வாழ்வதே...!*_

No comments:

Post a Comment