Friday 12 April 2024

பாதையும் பயணமும்

 பாதையும் பயணமும் . .

_*ஒரே வார்த்தையில் அதிக பட்ச சந்தோசத்தையும்.*_
_*ஒரே வார்த்தையில் கடும் வேதனையையும்.*_
_*தரும் வல்லமை படைத்தது மனிதர்களின் நாக்கு.*_
மனிதன் தனக்குத் தானே
நிறைய தீர்மானித்துக் கொள்கிறான். பெரிய பணக்காரனாக வேண்டும்
என்று நிறைய பேர் தீர்மானித்துக் கொள்கிறார்கள்.
அந்த இலக்கை அடைய வேண்டும், இந்த இலக்கை அடைய வேண்டும் என்று நிறைய பேர் தீர்மானித்துக் கொள்கிறார்கள்.
அத்தனை பேரின் தீர்மானமும் நடந்து விடுமா என்ன, மனிதன் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களும் ஏதோ ஒரு இலக்கை தீர்மானித்துக் கொண்டுதான் பயணிக்கின்றன. ஆனால், எல்லா தீர்மானங்களையும் அடைந்து விட முடிவதில்லை.
அந்தக் கரை பச்சை பசேல் என்று இருக்கிறது. சிரமப்பட்டு ஆற்றைக் கடந்து அங்கே போனால்
புலி உருமிக் கொண்டு பாய்ந்து வருகிறது. அக்கரை மானின் இலக்கு. மானை அடைய வேண்டும் என்பதோ புலியின் இலக்கு.
எனவே இலக்கை தீர்மானிக்கும் பொழுது இயற்கையின் நியதியை உணர்ந்து, இயற்கையோடு மாறுபடாமல், அறிவுப் பூர்வமாக தீர்மானித்து காத்திருக்க வேண்டும். பொறுமை மிகமிக அவசியம். நிச்சயமாக உங்கள் தீர்மானங்கள் நிறைவேறும்.
இன்றைய பொழுதை வைத்து
எதையும் தீர்மானித்து விடாதீர்கள். காலமும் நேரமும் மாறக்கூடியது.
காலம் நீங்கள் பயந்தாலும் ஓடும், பணிந்தாலும் ஓடும். துணிந்தால் மட்டுமே உங்கள் பின்னால் ஓடி வரும்.
கடந்த காலத்தில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். கடந்த காலத்தில் வாழ வேண்டாம்.
பயணத்தை வேண்டுமானால் காலம் முடிவு செய்யலாம். ஆனால் பாதையை தீர்மானிப்பது நீங்களாக இருங்கள்.
_*எத்தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல...*_
_*செய்யும் தொழிலை மனநிறைவோடு மகிழ்ச்சியாக செய்தாலே போதும் நாளை நம் கையில்.*_

No comments:

Post a Comment