Tuesday 2 April 2024

இளம் பருவம் முதுமைப் பருவம் . .

 இளம் பருவம் முதுமைப் பருவம் . .

_*எழுத்துகளை நேசிப்பவரின்*_
_*எண்ணங்கள் எப்பொழுதும்,*_
_*குறுகியதாக இருப்பதில்லை.*_
_*அன்புக்குரியோர்*_
_*விரும்ப வேண்டும் என்று...*_
_*பொய்யான முகமூடிகளை*_
_*போட்டுக்கொள்ளாதீர்...*_
_*ஒருவேளை முகமூடிகள்*_
_*கிழிக்கப்பட்டால்...*_
_*மொத்தமாக வெறுத்து விடுவர்.*_
_*மையப்புள்ளி இதுதான் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை....*_
_*அதை சுற்றி யார் யாரை நிறுத்தப் போகிறோம் என்பதில் தான் குழப்பம் நிடிக்கிறது.*_
_*மனிதர்களுக்கு மனிதர்கள் மட்டுமே தேவை என்பது,*_
_*இரண்டு பருவத்தில் உணரப் படுகிறது,*_
_*ஒன்று வாழத் தெரியாத இளம் பருவம்,*_
_*இன்னொன்று வாழ்ந்து முடித்த முதுமைப் பருவம்.*_
நேரா போய் ரைட் எடுத்தா,
ஒரு தோல்வி வரும் அங்கருந்து
லெப்ட் போனா பெருசா
ஒரு துரோகம் இருக்கும்,
கொஞ்ச தூரம் போயி ஒரு யு டேன் அடுச்சா, அங்க கடன் என்கிற ஒரு பெரிய பள்ளம் இருக்கும்,
அந்த பள்ளத்துல விழுந்து மூஞ்சி மொகர எல்லாம் பேந்து
எந்திருச்சு நேரா போனா,
ஏமாற்றங்கர ஒரு சிக்னல் இருக்கும், அதையும் தாண்டி போனா, போட்டி, பொறாமைங்கர ஸ்பீடு பிரேக்கர் வரும்,
அதையும் தாண்டி டாப் கியர் போட்டு போயிகிட்டே இருந்தால் அதுக்கடுத்த வீடு தான் நீங்க கேட்ட வெற்றி.
_*சில நேரங்களில் முடிவெடுக்க இயலாமைக்கு,*_
_*இதுவா...? அதுவா...? இப்படிச் செய்யலாமா...? அல்லது*_
_*அப்படிச் செய்யலாமா...? என்ற குழப்பமே காரணம். ஒரு தெளிவான முடிவு எடுப்பதில் ஒரு தயக்கம்*_
_*எந்த முடிவையும் எடுப்பதில்லை என்று முடிவு எடுப்பதை விட, எதாவது ஒரு முடிவை எடுக்கலாம்,*_
_*அது தோல்வியில் முடிந்தால்கூட முயற்சித்தோம் என்ற அளவிளவாவது மகிழலாம்*_
_*வெற்றி பெற்றவன் காரணத்தை*_ _*தேடுவதில்லை*_
_*காரணத்தை தேடுபவன் வெற்றி பெறுவதில்லை*_

No comments:

Post a Comment