Monday 15 April 2024

வேதனை விரக்தி வராது .

 வேதனை விரக்தி வராது .

_*குணமும் பணமும்
ஒருவகையில் ஒன்று தான்.
இரண்டுமே நிலையாய் இருப்பதில்லை மனிதர்களிடத்தில்.*_
_*நிரந்தரமாக இன்பம் துன்பம் அடைந்தவர்கள் இல்லை.
ஒரு கட்டம் வரவு, ஒரு கட்டம் செலவு,
ஒரு கட்டம் இன்பம்,
மறு கட்டம் துன்பம்.*_
_*இது தான் இயற்கை
என்பதை உணர்ந்து கொண்டு மகிழ்ச்சியாய் புன்னகையுடன்
நகர்ந்து செல்வோம்.*_
_*வரிகளைச் சுமந்தால் தான் அது கவிதை. கற்பனைகளைச் சுமந்தால் தான் அவன் கவிஞன்.
வலிகளை சுமந்தால் தான் அது வாழ்க்கை. காயங்களைச் சுமந்தந்தால் தான் அவன் மனிதன்.*_
_*எல்லோரும் நல்லவர்கள் என்று நினைப்பது தவறு இல்லை ...*_
_*ஆனால்*_
_*எல்லா நேரமும் நல்லவர்களாகவே இருப்பார்கள் என்று நினைப்பதுதான் தவறு .*_
_*எதுவும் இல்லை என வருத்தப்படாதீர்கள்.*_
_*இருப்பதைக்கொண்டு இன்பமாய்*_
_*வாழக்கற்றுக் கொள்ளுங்கள்.*_
_*தேவையற்ற பகுதிகளை இழக்கின்ற போது தான்.*_
_*கல்லே சிற்பமாகிறது.*_
"அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது" என்றார் தமிழ் மூதாட்டி.
அப்படி அரிதாகப் பெற்ற மனித வாழ்க்கையை எப்படிப் பயன் படுத்துகிறோம் என்று சிந்தித்து, வாழ்வில் வெற்றி பெறுமளவு செயலாற்ற வேண்டியது இன்றியமையாதது.
"நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ" சுடர் மிகும் அறிவுடன் நம்மைப் படைத்த சிவ சக்தியை நோக்கி, "இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே வல்லமை தாராயோ" என்று வேண்டுகிறார் மகாகவி பாரதி.
இறைவன் அளித்த இவ்வாழ்விற்கு வெவ்வேறு விளக்கங்களை அளிக்கின்றனர் சான்றோர்கள். வல்லான் வகுத்ததே வாய்க்கால் (வாழ்க்கை) என்பார் ஒருவர். வாழ்வின் இலக்கை வெவ்வேறு விதமாய் வகுப்பார் மற்றவர். வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் பார்த்தனர் பெரியோர்கள். வாழ்வின் இலக்கணத்தை
வரையறுத்துக் கூறினர் வேறு பலர்.
வாழ்வில் வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு உண்டு. வெற்றி கண்டு துள்ளிக் குதிக்காமலும், தோல்வி கண்டு துவழ்ந்து விழாமலும், இரண்டையும் சம நோக்கோடு பார்க்கப் பழகிக்கொண்டால் வேதனை வராது; விரக்தி நம்மை அண்டாது.
ஒவ்வொரு மனிதனும் தான் எண்ணி ஆற்றிய செயல்களுக்குத் தகுந்த பயனை எதிர்பார்ப்பது இயற்கையே. எண்ணிச் செய்த கருமத்திற்கு எண்ணிய பயனைப் பெற்று விட்டால் மகிழ்ச்சியும், பெறா விட்டால் வேதனையும் அடைகிறோம்.
எங்கெங்கு எதிர்பார்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றனவோ, அங்கெல்லாம் ஏமாற்றங்களும் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. இத்தகு ஏமாற்றங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தினால்தான், கண்ணன் கீதையில் 'கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே" என்று உபதேசித்தார்.
மனிதனுடைய திறமை பெரிதல்ல. கிடைக்கின்ற சந்தர்ப்பமே அவனைப் பிரகாசிக்கச் செய்கிறது.
கடமையைச் செய்யும்போது மகிழ்ச்சியாகச் செய்தால், அதன் முடிவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
சின்னச் சின்ன நல்ல விஷயங்களைச் சேர்த்துக்கொண்டே முன்னேறுங்கள், அதுவே இறுதியில் நம்மை முழுமையானதாக மாற்றுகின்றது.
வாழ்க்கையைப் பந்தயமாக எண்ணி ஓடுபவர்கள் களைத்துப்போய் விடுகிறார்கள். பயணமாய் எண்ணுபவர்கள் கலகலப்பாய் மகிழ்கிறார்கள்.
_*தேவைகளையும், தேடல்களையும் பொறுத்தே...*_
_*மனம் மகிழ்ச்சியும், மனநிறைவும் பெறுகிறது .*_

No comments:

Post a Comment