Wednesday 10 April 2024

உடலும் மனதும் . .

 உடலும் மனதும் . .

_*"ஏராளமாய்" இருக்கிறது என்பதற்காக "தாராளமாய்" வாரி இறைக்காதீர்கள்...*_
_*"பணத்தையும்"*_
_*"வார்த்தைகளையும்"...*_
_*இரண்டிலும் முடிந்தளவு சிக்கனத்தை கடைபிடிக்கயுங்கள் வாழ்க்கை வளமாக இருக்கும்.*_
_*உங்களால் யாருக்கும் நிழலாக இருக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை...*_
_*ஒரு சிறு செடியை நட்டு விட்டு செல்லுங்கள் உங்களால் ஒரு நாலு பேர் அம்.மரத்தின் நிழலில் இளைப்பாறி விட்டு செல்லட்டும்.*_
_*பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள்..*_
_*வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்..*_
_*அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில்..*_
_*அவர்களே உருவாக்குகிறார்கள்.*_
மனிதர்கள் எதை,வேகமாக
விரும்பி ஏற்கிறார்களோ,
அதே வேகத்தோடு அதை வீசியும் எறிகிறார்கள்.
நாம் ஒருவருக்காக
99 விஷயங்களைச் செய்தாலும்,
நாம் செய்யாத ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.
பெரும்பாலும் புரியவைப்பதற்காக போடப்படும் சண்டைகள்
பிரிவில் தான் முடிகிறது.
அனைத்தையும்
கடந்து செல்வதை விட அங்கங்கே மறந்து செல்லுங்கள். உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும்.
_*வார்த்தைகள் சாவிகள் போன்றவை.*_
_*நீங்கள் அவற்றை சரியாகத் தேர்வு செய்தால் அவைகளால் எந்த இதயத்தையும் திறக்கவும் முடியும்.*_
_*எந்த வாயையும் பூட்டவும் முடியும்.*_
_*கோபத்தோடு சிந்தியுங்கள்*_
_*வெறுப்பு வந்து விடும்.*_
_*இவர் இப்படி தான் என்று சிந்தியுங்கள்...*_
_*மன்னித்து மறக்க தோன்றி விடும்*_
_*அதான் நம்ம மனசு*_

No comments:

Post a Comment