Monday 1 April 2024

பெரிய பாறை சிறிய கற்கள்

 பெரிய பாறை சிறிய கற்கள் . .

_*உங்களுக்கு அற்புதமான திறமைகள் இருக்கலாம். “என்னால் முடியும்” என்று சொல்லி உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். அப்பொழுது தான் நீங்கள் எதையும் சாதித்துக் காட்ட முடியும்.*_
_*நூறுபேர் உங்களை வாழ்த்தினாலும், இரண்டு பேர் உங்களைத் திட்டவே செய்வார்கள். மனதை மட்டும் நேர்மையாக வைத்துக்கொண்டு வாழ்த்துக்களையும், வசைகளையும் கண்டு கொள்ளாமல் உங்கள் கடமையை செய்யுங்கள்.*_
வீட்டில் மூன்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன
திடீரென வீடு தீப்பிடித்து விட்டது
தந்தை குழந்தைகளிடம் வந்து
வாருங்கள் வெளியே ஓடிவிடலாம் என்றார்.
ஆனால்
குழந்தைகளோ வெகு ஆர்வமாய் விளையாட்டில் தன்னை மறந்து போட்டிப் போட்டுக்
கொண்டிருக்கின்றன
தந்தையின் குரலே
அவைகளுக்கு கேட்கவில்லை.
தந்தை உடனே குழந்தைகளிடம்
வெளியே வந்து பாருங்கள்
நீங்கள் விளையாட
புது கால்பந்துகள், கிரிக்கெட் மட்டை, பந்து எல்லாம்
வாங்கி வந்திருக்கிறேன் என்றார்.
உடனே குழந்தைகள்
விளையாடிக் கொண்டிருந்த பழைய விளையாட்டை விட்டுவிட்டு
வெளியே ஓடி வந்தன
வெளியே வந்து பார்த்தால்
தந்தை சொன்னது பொய்
ஆனால்
இப்போது வீடு தீப்பற்றி எரிவதை குழந்தைகளால் பார்க்க முடிந்தது.
தங்களைக் காப்பாற்றிய
தந்தைக்கு நன்றி கூறின.
இதுபோலத்தான் தியான யுக்திகள் :
உன்னை இந்த மனதின் விளையாட்டிலிருந்து விடுவிக்கச் சொல்லும் தந்திரம்தான்.
தியான யுக்திகளுக்கும்
தியான நிலைக்கும் தொடர்பில்லை.
ஆனால்
தியான யுக்திகள் உனக்குத் தேவை
இல்லையென்றால்
நீ மனதின் விளையாட்டையே உண்மையென எண்ணி மாய்ந்து போவாய்.
வீடே உலகமென எண்ணி
மனத்திலேயே வாழ்ந்து விடுவாய்.
வெளியே இருக்கும் விரிந்த உலகம்
உண்மை உலகம்
தன்னுணர்வு உலகம்
உனக்குத்
தெரியாமலேயே போய்விடும்.
_*பாதையில் கவனம் தேவை. பெரிய பாறை ஒதுங்கி போக வைக்கும், சிறிய கற்களே தவறி விழுவைக்கும்.*_
_*துன்பங்கள் வேண்டாம் என்று*_ _*வேண்டிக்கொள்ளாதீர்கள். அதனை எதிர் கொள்ளும் சக்தியை*_ _*கொடு என்று*_
_*வேண்டிக் கொள்ளுங்கள்.*_
_*எதிர்கொள்ளாத எதிலும் எதையுமே கற்றுக்கொள்ள முடியாது.*_
_*கவலைகள் நம்மை கடந்து செல்லும் என்று காத்திருப்பதை விட கவலைகளை நாம் கடந்து சென்றால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.*_
_*வாழ்க்கையில் வீணாக கடந்ததையும்*_ _*நடந்ததையும் மறந்து விடுங்கள். இனி கடப்பதையும்*_ _*நடப்பதையும் கவனமாக*_
_*கையாளுங்கள்.*_

No comments:

Post a Comment