Thursday 31 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பல்லவி இல்லாமலேயே சரணமோ அல்லது சரணத்தின் ஒரு வரியே கூட அந்த பாட்டை நம் மன சிந்தனையில் ஓட விடக்கூடிய வலிமையை பெற்றவர் கவிஞர் கண்ணதாசன் மட்டுமே. அப்படி அவர் எழுதிய சில பாடல்கள் கீழே தொகுக்க பட்டுள்ளது.
அவ்வகை பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்த MSV ஐயா, கே.வி.மகாதேவன் ஐயா,T.M.S ஐயா ,P.சுசீலா அம்மா, PB சீனிவாஸ ஐயா ,சிவாஜி ஐயா, எம்.ஜி.ஆர் அவர்கள் ,ஜேசுதாஸ் , SPB ,சீர்காழி ஐயா மற்றும் இதில் விடுபட்ட ஏனைய கலைஞர்களையும் நினைவு கொள்ளுவோம்.
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்
கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா
பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா
இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா
தலைவா என்னை புரியாதா
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும்
கூட்டை திறந்து விட்டால் அந்த
குருவி பறந்து விடும்
காலில் விலங்கும் இட்டோம்
கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம்
நாட்டியம் ஆடுகின்றோம்
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உன்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? .
கன்னிக் காய் ஆசைக் காய்
காதல் கொண்ட பாவைக் காய்
அங்கே காய் அவரைக் காய்
மங்கை எந்தன் கோவைக் காய்
மாதுளங்காய் ஆனாலும்
என்னுளங்காய் ஆகுமா
எனை நீ காயாதே
என்னுயிரும் நீ அல்லவோ
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடா
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
நானாட வில்லையம்மா சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா
வாழ்க்கை வழியிலா ?
ஒரு மங்கையின் ஒளியிலா ?
ஊரிலா ? நாட்டிலா ?ஆனந்தம் வீட்டிலா ?
அவள் நெஞ்சின் ஏட்டிலா ?
சொந்தம் இருளிலா ?
ஒரு பூவையின் அருளிலா ?
எண்ணிலா ?ஆசைகள் என்னிலா ?
கொண்டது ஏன் ?
அதைச் சொல்வாய் வெண்ணிலா
பிரமிப்பாக இருக்கிறதல்லவா? வாழ்க காவியக் கவிஞர் கண்ணதாசன் ஐயா அவர்களுடைய புகழ்.
தகவல் லெட்சுமன்குமார் ராஜு


No comments:

Post a Comment