Saturday 19 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீீ)

😼😻நம்மில் பலர் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்று அறியாமலேயே காலத்தை கடத்தியும் கடந்தும் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே யதார்த்தம்.
😼😻ஒருவரின் பலவீனத்தை
அடிக்கடி சுட்டிக் காட்டுவது
அவர்கள் வளர்ச்சியைத் தடுக்கும். பலத்தை சுட்டிக் காட்டுங்கள், அது தன்னம்பிக்கையை தரும். வாழ வைக்கும்.
😼😻கெட்டது செய்பவன் மட்டும் கெட்டவன் இல்லை, நல்லது நடப்பதை தடுப்பவனும் கெட்டவனே.
😼😻பணம், நோயற்ற வாழ்வு, உதவி, நல்ல நண்பர்கள், உறவினர்களின் வாழ்த்துக்கள் இருந்தால் வாழ்க்கை இனிக்கும்.
😼😻ஒரு விஷயத்தை தொடங்குவது எளிது. ஆனால் விஷயத்தின் முடிவு விரும்பிய படி வேண்டுமெனில் கடின முயற்சியே தீர்வு.
நடப்பது நன்மைக்கே
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment