Wednesday 30 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🤢எதையும் எத்தனை முறை வேண்டுமானாலும் யோசியுங்கள். ஆனால் அரை மனதோடு மட்டும் செய்யாதீர்கள்.
🤢முயற்சி செய்து தோல்வி அடைந்தால் வருந்தாதே. இங்கு நிறையப் பேர் தோல்வி பயத்தில் முயற்சியே செய்யாமல் காலத்தை வீணடிக்கிறார்கள்.
🤢நம் வாழ்வில் எத்தனை இலக்குகளை இழந்தோம் என்பதை விட எத்தனை இலக்குகளை முயன்றோம் என்பது தான் முக்கியம்.
🤢ஏன் என்று கேட்பதற்கு பதில், எப்படி என்று கேட்டு பாருங்கள். உங்கள் வாழ்வில் பல வினாக்களுக்கு விடை புரியும். ஏன் என்பது பகுத்தறிவு. எப்படி என்பது பட்டறிவு.
🤢குழப்பம் இருந்தால் யோசனை வரும். யோசித்து ஒரு செயலைத் தொடங்கும் போது செவிடாய் மாறி விடுங்கள். ஏனெனில் முதலில் உற்சாகமான சொற்களை விட கேலி சொற்கள் தான் அதிகம் இருக்கும்.
எல்லாம் நன்மைக்கே
வாழ்க்கை வாழ்வதற்கே

No comments:

Post a Comment