Wednesday 30 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🏄சந்தோசம், வெற்றி, மன அமைதி, நினைப்பதை நிறைவேற்றும் திறமை எல்லோருக்கும் உண்டு. நாம் பயன் படுத்தும் வழி முறையும், முயற்சியும் பயிற்சியும் தான் வெற்றியையும் வெற்றியின் கால அளவையும் முடிவு செய்யும்.
🏄வாழ்க்கை ஒரு அனுபவம். நல்ல அனுபவம் கிடைச்சா பரவசப் படணும், மோசமான அனுபவம் கிடைச்சா பக்குவப் படணும். அனுபவிங்க வாழ்க்கையை.
🏄நிரந்தரமாக இன்பம் துன்பம் அடைந்தவர்கள் இல்லை. ஒரு கட்டம் வரவு மறு கட்டம் செலவு,ஒரு கட்டம் இன்பம் மறு கட்டம் துன்பம். இப்படி தான் இறைவனின் திருவிளையாடல்.
🏄"என்ன"வாழ்க்கை இது என்று நினைக்காமல், "இந்த"வாழ்க்கைக்கு என்ன குறை என்று நினையுங்கள். "வெற்றி" உங்களுக்கே.
🏄நாம் நம் வாழ்வில் தகர்க்க வேண்டியது. நம்மைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையை மட்டுமே.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment