Thursday 31 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)



திருச்சி மாவட்டம் கொள்ளிடக் கரையில் உள்ள மேலக்குடிகாடு என்ற கிராமத்தில் கிராம அதிகாரியான அய்யம்பெருமாளுக்கும் மிளகாயி அம்மாளுகும் பிறந்தவர் மருதகாசி (1920) பிறந்து வளர்ந்து குடந்தையில் கல்லூரி.. சிறுவயது முதலே கவிதை எழுதத்தேர்ந்தவர்.. பின் நாடக ஆர்வம்.
சேர்ந்தது குடந்தை தேவி நாடக சபை.. திருச்சி லோக நாதனின் இசைக்கு இவர் எழுதிய நாடகப் பாடல்கள் பேசப்பட கதவைத்தட்டியது சினிமா வாய்ப்பு..
ஜி. ராமனாதனின் இசையில் பெண் எனும்மாயப் பேயாம் (படம் மாயாவதி தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ்) எனும் பாடலே முதல் பாடல்..
மெட்டுக்குத் தக்கபடி வார்த்தைகள் இவருடைய விரல்களில் சுற்றிச் சுற்றிச் சுழன்றோடி வந்து டபக்கென ஆங்காங்கே அமர்ந்து கொண்டன.. இவரது திறமையில் அழைப்புகளும் தானே வந்தன..
சுமார் 250 படங்களில் 4000 பாடல்கள் இவர் எழுதியிருக்கிறார் என்றால் கொஞ்சம் நம்புதற்குச் சிரமம் தான்..ஆனால் தெரிந்த பாடல்களைப் பார்க்கும் போது இவரா என ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை..
தூக்குத்தூக்கியில்…
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே!
சூலியெனும் உமையே!
சூலியெனும் உமையே குமரியே!
கண்ணொளி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மெளனம்.. பாடலும் இவர் தான்..
இவர் எழுதிய பாடல்களில் எதைச்சொல்ல எதைவிட எனத் தெரியவில்லை..எல்லாமே எனக்குப் பிடித்த பாடல்கள் தான்..இருந்தாலும் கொஞ்சம் செலக்ட் செய்ததில்..
"அடிக்கிற கைதான் அணைக்கும், அணைக்கிற கைதான் அணைக்கும்" (வண்ணக்கிளி, 1959)
"அன்பினாலே உண்டாகும் இன்பநிலை - அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை " (பாசவலை, 1954)
"அன்பே அமுதே அருங்கனியே ஆனந்த வாழ்வை காண்போம் நாமினிதே" (உத்தமபுத்திரன், 1958)
"ஆடாத மனமும் உண்டோ! நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு" (மன்னாதி மன்னன், 1960)
"ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே" (பாவை விளக்கு, 1960)
"இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு - அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு" (மனமுள்ள மறுதாரம், 1958)
"உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே"
(மந்திரி குமாரி, 1950)
"எந்நாளும் வாழ்விலே! கண்ணான காதலே! என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே!" (விடிவெள்ளி, 1960)
"என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்" (தங்கப்பதுமை, 1958)
"என்னை விட்டு ஓடிப்போக முடியுமா? இனி முடியுமா?" (குமுதம், 1960)
"ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே! என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!" (பிள்ளைக் கனியமுது, 1958)
"ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே! வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே!" (பாகப்பிரிவினை, 1959)
"கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி" (விவசாயி, 1967)
"கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம்?" (தூக்கு தூக்கி, 1954)
"கண்களால் காதல் காவியம் செய்து காட்டும் உயிர் ஓவியம்" (சாரங்கதாரா, 1958)
"கண்ணாலே நான் கண்ட கணமே உயிர்க் காதல் கொண்டதென் மனமே" (பார்த்திபன் கனவு,1960)
"காவியமா? நெஞ்சின் ஓவியமா? அதன் ஜீவியமா? தெய்வீக காதல் சின்னமா?" (பாவை விளக்கு, 1960)
"கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்! வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்!" (கைதிகண்ணாயிரம், 1960)
"கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை!" (விடிவெள்ளி, 1960)
"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா" (நீலமலைத்திருடன், 1957)
"சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?" (குலமகள் ராதை, 1963)
"சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு" (வண்ணக்கிளி, 1959)
"தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்" (பெற்ற மகனை விற்ற அன்னை, 1958)
"தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது" (வெள்ளிக்கிழமை விரதம், 1974)
"நீல வண்ணக் கண்ணா வாடா! நீ ஒரு முத்தம் தாடா!" (மங்கையர் திலகம், 1955)
"நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு" (தாய் மீது சத்தியம், 1978)
"மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏரு பூட்டி" (மக்களைப் பெற்ற மகராசி, 1957)
"மனுஷன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே! இது மாறுவதெப்போ? தீருவதெப்போ நம்மக் கவலே" (தாய்க்குப்பின் தாரம், 1956)
"மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே" (அலிபாபாவும் 40 திருடர்களும், 1955)
"மாட்டுக்கார வேலா! ஒம் மாட்டைக் கொஞ்சம் பார்துக்கடா!" (வண்ணக்கிளி, 1959)
"மாமா.. மாமா.. மாமா ...சிட்டுப் போல பெண்ணிருந்தால் வட்டமிட்டு சுத்திசுத்தி" (வண்ணக்கிளி, 1959)
"மியாவ் மியாவ் பூனைக்குட்டி" (குமுதம், 1961)
"முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே" (உத்தமபுத்திரன், 1958)
"வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே" (சாரங்கதாரா, 1958)
"வண்டி உருண்டோட அச்சாணி தேவை" (வண்ணக்கிளி, 1959)
"வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ?" (எங்கள் குலதேவி, 1959)
"வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்!" (பாவை விளக்கு, 1960)
"வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே! ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே!" (மல்லிகா, 1957)
"வாராய் நீ வாராய்! போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்" (மந்திரி குமாரி, 1950)
ஸாரிங்க..லிஸ்ட் கொஞ்சம் நீளமாய்டுத்து..
அ முதல் அஃகு வரை.

No comments:

Post a Comment