Wednesday 30 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தலை என்ன விலை?
*********************
சக்கரவர்த்தி அசோகர் ரதத்தில் வரும் போது எதிரில் துறவி ஒருவர் வருவதைக் கவனித்தார். உடனே இறங்கி, அவர் காலில் விழுந்து வணங்கினார். இதைக் கண்ட தளபதி திகைப்பில் ஆழ்ந்தார்.
'நாடாளும் சக்கரவர்த்தி, பிறர் தயவில் வாழும் ஒரு பரதேசியின் காலில் விழுவதா' என்று எண்ணி வருந்தினார். 
அரண்மனைக்கு வந்ததும், கேட்டும் விட்டார்.
புன்னகைத்த அசோகர்,'ஒரு ஆட்டுத்தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத்தலை மூன்றையும் கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள் ' என்றார்.
பணியாளர் ஒருவர் மூன்று தலைகளையும் எடுத்து வரவே, அதை கடைத்தெருவில் விற்று விட்டு கிடைத்ததை கொண்டு வர உத்தரவிட்டார்.
ஆட்டுத்தலை உடனே விலைபோனது. புலித்தலையை பலர் வாங்கத் தயங்கினர். இருந்தாலும், வேட்டைக்காரர் ஒருவர் விருப்பமுடன் வாங்கிச் சென்றார்.
ஆனால், மனிதத் தலையை வாங்க ஆளில்லை என்பதை விட அனைவரும் அதைக் கண்டு அஞ்சினர்.
தகவல் அறிந்த அசோகர், யாருக்காவது இலவசமாக கொடுத்து வரச் சொன்னார். அப்படியும் யாரும் வாங்கவில்லை.
முடிவாக அசோகர் தளபதியை அழைத்தார்.
''தளபதியாரே, மனிதனின் மதிப்பை தெரிந்து கொண்டீர்களா.... உயிரற்ற பின் யாருக்கும் பயன்படாத தலை, உயிர் இருக்கும் நாலுபேரை வணங்கியாவது நன்மை பெறட்டும்.''
தெளிவு பெற்ற தளபதி, தலை தாழ்ந்து அசோகரை வணங்கினார்.

No comments:

Post a Comment