Monday 30 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பாகிஸ்தானில் ஒரு இந்து கிராமம்!
***********************************************
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து 280 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மித்தி என்னும் கிராமம்
. பாகிஸ்தானில், முஸ்லிம்களை விட அதிகமாக இந்துக்கள் இருக்கும் ஒருசில இடங்களில் இதுவும் ஒன்று. உள்ளூர் அரசின் கணக்கின்படி, மித்தியில்
87 ஆயிரம் மக்கள் வசிப்பதோடு, அதில் 70 சதவிகிதம் பேர் இந்துக்களாக உள்ளனர்.
`எந்த ஒரு மதரீதியான, கலாச்சார ரீதியானபண்டிகை யாக இருந்தாலும் நாங்கள் ஒன்று கூடுவோம்.
இந்துக்கள் தீபாவளி கொண்டாடும் போது எங்களை அழைப்பார்கள். நாங்கள் ஈகைத்திருநாளை கொண்டா டும் போது அவர்களை அழைக்கிறோம் ` என்று நினைவு கோருகிறார், முன்னாள் ஆசிரியரும்,
நாடகத் தயாரிப்பாளருமான ஹஜி முகமது டால்.
முகரம் நாட்களில் வழிபாடுகளில் பங்கெடுப்பதோடு, சில நேரங்களில் முஸ்லிம்களோடு சேர்ந்து இந்துக்கள் நோம்பும் இருப்பார்கள் என்கிறார் அவர்.
இந்துக்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக,
இந்த நகரில் முஸ்லிம்கள் மாட்டு இறைச்சிகளை உண்பதில்லை என்பது மிக முக்கியமான ஒன்று
.
`1971ல் இந்திய விமானப்படை மித்தி வரை வந்த போது, முஸ்லீம்கள் அனைவரும் மித்தி கிராமத்தி லிருந்து இரவோடு இரவாக வெளியேறிருக்கிறார்கள்.
அதன்பின் அங்கு வசித்த அனைத்து இந்துக்களும் அதற்காக மிகவும் வருத்தம் அடைந்ததோடு,
மீண்டும் தங்களோடு வந்து வசிக்கும்படி எங்களை கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
2001ஆம் ஆண்டு, மித்தியில் உள்ள ஜாமியா மசூதி யை விரிவுபடுத்த முயன்ற போது, அதன் அருகில் வசித்து வந்த இந்துப் பெண்மணி ஒருவர் தானாகவே முன்வந்து தனது நிலத்தினை தானமாக வழங்கியுள்ளார்.
விஷான் தாரி என்னும் இந்து, தார்பர்கர் என்னு மிடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ரத்த வங்கியை ஒன்றை நடத்துகிறார். "இஸ்லாமியர்கள் த‌ன்னை மிகவும் அதிகமாக மதிக்கிறார்கள் என்றும் எந்த பாகுபாடும் இல்லாமல் த‌ங்களிடம் முஸ்லீம்கள்
ரத்த தானம் செய்வதாகவும் கூறுகிறார் இவர்.
2015ஆம் ஆண்டு ஹோலி பண்டிகை அன்று, மிகவும் புகழ்பெற்ற சிந்தி பாடகரும் இஸ்லாமியருமான‌, சாதிக் ஃபகீரின் என்பவர் மரணமடைந்திருக்கிறார்.
அதையடுத்து, எந்த இந்துக்களுமே தங்கள்
மீது வண்ணங்களை பூசி கொண்டாடவில்லை.
அன்று மித்தி நகரமே துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத்தில் இருந்து, மித்திக்கு குடியேறியுள்ள, தனியார் பள்ளி தலைமை ஆசிரியையான கம்லா பூனம் என்பவர் கூறும் போது, `இங்குள்ள மக்கள் ஆரம்பம் முதலே நல்லி ணக்கத்து டன் வாழ்கின்றனர். இங்குள்ள முதியவர்கள், அமைதி யான பாரம்பரியத்தை தொடர்ந்து உயிர்வாழ வைத்துள்ளனர். சில நேரங்களில், இங்குள்ள இளைஞர்கள் எல்லையை மீறினாலும்,இரு மதத்தை சேர்ந்த பெரியவர்களும் அவர்களை ஒழுங்கு படுத்துகின்றனர்` என்கிறார்.
மத கலவரத்தால் கிழிக்கப்படும் பகுதிக்கு தனித்துவ மான எடுத்துக்காட்டாக உள்ளது இந்த மித்தி என்னும் கிராமம்.
அன்பை பரப்புவது எப்படி என்பதை மற்றவர்கள் இந்த கிராமத்து மக்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment