Monday 16 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

முன்னாள் ஜனாதிபதிபிரணாப் முகர்ஜீ அவர்கள் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு சாட்டையடி
வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டார்
அதன் சாராம்சம் வருமாறு:
ஊடக தர்மம் என்று உண்டு. முறையான கேள்விகளை முறையான வழியில் பண்போடு கேட்க வேண்டும். கேட்கப்படும் கேள்விகளும் கொடுக்கப்படும் பதில்களும் பார்வையாளர்களின் கவனத்திற்கேயன்றி கேள்வி கேட்பவருக்கு அல்ல.சில ஆண்டுகளாக ஊடகப் பேட்டியின் போது பேட்டி காண்பவர்கள் மிரட்டுகிற ​தோரணையில் குரலை உயர்த்தித்தான் பேசுகின்றனர். தங்களுடைய வாத அகந்தையை வெளிக்காட்டுகின்றனர் உண்மை நிலைமை பற்றிய விளக்கம்பெற கேள்வி கேட்பதாகத் தெரியவில்லை. மாறாக தன் வாதத்திறமையை காட்சி பொருளாக வைக்கின்றனர்.சுட்டிக்காட்டினால் ஊடக உரிமை பறிக்கப்படுகிறது என்கிறார்கள்.
ஊடகங்கள் அவரவர்கள் அவரவர்களுக்கு விருப்பமான வகையில் செய்தி போட்டுக்கொள்கிறார்கள். அவரவர்கள் அவரவர்களுக்கு விருப்பமில்லாத செய்திகளை இருட்டடிப்பு செய்து விடுகிறார்கள். இன்றைய நிலையில் ஊடகங்களில் வரும் செய்தியினை வைத்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதே உண்மை நிலை. ஊடகங்கள் நம்பிக்கைத்தன்மை இழந்து வருகிறது
ஆதலால் தான் செய்தித் த டங்களுக்கு வரவேற்பும்
குறைவாகவே இருக்கிறது கொலை கொள்ளை கற்பழிப்பு சினிமா செய்திகள்எல்லாமே திசை மாறிப் போகிறது. ஊடகங்களின் பயனற்ற விவாதங்களால் வழக்குகளும் சரிவர வாதாட முடியாமல் கொலையாளிகளை, திருட்டு ராஸ்கள்களும் தப்பிக்க முயலுகிறார்கள்.
Thanks to Narayanan Seshadry

No comments:

Post a Comment