Monday 23 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மிக நீண்ட கேள்வி. .
விஜய் மெர்சல் படத்தில் சில வசனங்களில் இப்போ என்ன தவறுசெய்துவிட்டார்? இது சார்ந்து வந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கவிரும்பவில்லை. ஆனால் முக்கியமான 2 விவரங்கள் விஜய் ரசிகர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
1)கோவில்கள் கட்டுவதற்கு பதிலாக மருத்துவமனைகள் கட்டலாம். இந்த வசனம் ?
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரம் தான் இந்தியாவில் இருக்கும் மிக மிக உணர்வு பூர்வமான பிரச்சனை. அதை தான் ஜேசப் விஜய், அட்லீ கிருஸ்தவர்கள் சேர்ந்து மறைமுகமாக கிருஸ்தவ மிசினரிகளின் குரலாக ஒலிக்கிறார்கள் என்ற குற்றாசாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. விஜய்க்கு இந்து இளைஞர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள் , எனவே அப்படி செய்ய மாட்டார் என்று நம்புகிறேன்.
இதை ஏன் இந்துகள் மிக வேகமாக எதிர்க்கிறார்கள் என்று விஜய் ரசிகர்கள் உண்மைகளை புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்வேன்.
முகாலாயர் காலத்தில் நாடு முழுவதும் ஏறக்குறைய 50,000 இந்து கோவில்கள் இடிக்கபட்டு அந்த இடங்களில் இருந்த செல்வங்கள் கொள்ளை அடிக்கபட்டு மசூதிகள் வந்து உள்ளன என்பது வரலாற்று உண்மை. இதை அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் ஏற்பர். (உடனே இஸ்லாமியர் மீது வெறுப்பை உருவாக்கி கொள்ளவேண்டாம் இது வரலாறு. இதில் இருந்து பாடம் தான் கற்றுகொள்ள வேண்டும். அது தான் நமக்கும் சமூகத்திற்கும் நல்லது.)
இப்போ இந்த அனைத்து கோவில்களையும் இந்துகள் கேட்கவில்லை. இவர்கள் கேட்பது மூன்றே மூன்று கோவில்கள். அது
1.அயோத்தி ராமர் கோவில்
2.காசி விஷ்வநாத் கோவில்
3.மதுரா கிருஷ்ணன் கோவில்.
அது ஏன் என்றால் இஸ்லாமியருக்கு புனித நகரமாக மெக்கா மதினா போல் , கிருஷ்தவர்களுக்கு ஜெருசலம் போல் , யூதர்களுக்கு பாலஸ்தீனம்,காசா போல் - இந்துகளுக்கு இந்தியாவில் சில புனிதமான இடங்கள் உண்டு. சிவனடியார்களுக்கு திபேதில் உள்ள மானோசரவோர் தான் புனித பூமி. ஆனால் அதை பெற்று தருவதில் நேரு அக்கரை காட்டவில்லை. அத்துடன் திபத் இன்று சீனா ஆக்கரமிப்பில் உள்ளது. அடுத்து சீதா பிறந்த இடமும் இங்கே இல்லை, அயோத்தியில் ராமர் கோவில் இடிக்கப்பட்டுவிட்டது , காசியில் இருக்க இடிக்கபட்ட விஷ்வநாதர் கோவில் கட்டபடவில்லை , மதுராவில் கிருஷ்ணன் கோவில் இல்லை. இப்படி இடிக்கபட்ட முக்கியமான புனிதஸ்தளங்களை, அதில் அவர்களின் கோவில்களை மீண்டும் இந்துகள் கேட்பதில் எந்த தவறும் இல்லை.
நீங்கள் இதன் வலியை உணரவேண்டும். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் இடிக்கபடுவதாக நினைத்து கொள்ளுங்கள் -அது எந்த அளவு வலியை இந்துகளுக்கு தரும்? அதை முதலில் உணரவேண்டும்.
எனவே 50,000 கோவில்களை மீண்டும் கேட்கவில்லை - ஆனால் 3 கோவில்கள் இந்துகளுக்கு மீண்டும் வேண்டும் என்று கேட்பதில் உண்மையில் நியாயம் இருக்கிறது. இஸ்லாமியருக்கு தனி தேசமாக ஜின்னா கேட்க பாக்கிஸ்தான் பிரித்து கொடுத்துவிட்டு கோவிலும் கிடையாது என்றால் என்ன சர? {20% மக்களுக்கு இந்துக்ககளின் 24% நிலப்பரப்பை வாங்கிகொண்டார் ஜின்னா.. அத்துடன் இஸ்லாமியர் இங்கேயே இருப்பதில் இந்துகள் எதிர்க்கவும் இல்லை. ஆனால் பெரும்பாலான இந்துகள் பக்கிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்த வரலாறு எல்லாம் மிக கொடுரமானது. இவ்வளவு ஏமாற்றம் கண்ட மக்கள் உணர்வை புரிந்து மதிக்க வேண்டும்.}
{என் வீட்டு நிலம் என்றால் இன்னொரு மததினர் வழிபாட்டுக்கு கேட்க கொடுப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் இது அப்படியான விவகாரம் இல்லை - இந்து இந்துகளின் ஒட்டுமொத்த மக்களின் கூட்டு மனசாட்சியாக தான் பேசவேண்டும். இங்கே நான் நல்லவன் என்று காட்டிகொள்ள பேசுவது கூடாது.}
இவ்வளவு முக்கியமான விவகாரத்தை கொச்சைபடுத்தும் விதமாக
"கோவில் கட்டுவதற்கு பதில் மருத்துவமனைகள் கட்டுங்கள்" என்று வசனம் வருவது என்ன ! அதை ஒரு கிருஸ்தவர் இயக்கத்தில், நடிக்கும் இன்னொரு கிருஸ்தவர் பேசுவது என்றால் மக்களுக்கு வரும் கோபம் தடுக்க முடியாது.
இதை தவிர்திருக்கலாம் விஜய் அவர்கள்.
இன்னொரு முக்கியமான விசயம் , தமிழகத்தில் அதிகம் வருமானம் தரும் அனைத்து கோவில்களின் வருமானமும் அரசுக்கு தான் செல்கிறது. எந்த மசூதியின் வருமானமும், சர்சுகளின் வருமானமும் அரசுக்கு செல்வது இல்லை. அத்துடன் இந்து கோவில்களுக்கு சொந்தமான பலலட்சம் கோடி சொத்துகள் மூலம் வரும் வருமானமும் அரசுக்கு தான் செல்கிறது... எந்த கிருஸ்தவ ஆலயத்தின் வருமானம் 1 ருபாய் கூட அரசுக்கு செல்வது இல்லை.
அப்படி வரும் வருமானம் வச்சு அரசின் மருத்துவமனைகள் செலவினை ஒப்பிடவும்.. உண்மை புரியும்.. யார் காசு எங்கே செல்கிறது என்று.. எனவே இந்த பேச்சு மிக மிக கண்டிக்கபட வேண்டிய வசனம்.
------------------------------------------------------------------------------------------------------------
அதுக்கு எதற்கு சார் விஜய் அவர்களின் மதத்தினை இழுக்க வேண்டும்?
கீழ் வரும் விவரங்களை தயவு கூர்ந்து புரிந்துகொள்ளுங்கள் :
2015 FCRA (Foreign Contribution REgulation Act) வெளியிட்ட தகவல் என்ன கூறுவது என்னவென்றால்
-1994 முதல் 2012ஆம் ஆண்டுக்கு மட்டும் 1,16,073 கோடி ரூபாய் இந்தியாவிற்குள் வெளி நாடுகளில் இருந்து நன்கொடை என்ற பெயரில் NGOகளுக்கு வந்துள்ளது. மீண்டும் கூறுகிறேன் தொகை 1,16,073 கோடி. (1,16,073,00,00,000 ரூபாய்)
-அந்த தொகையில் பெரும் பங்கு மதம் மாற்றும் கிருஸ்தவ மிசினரிகளுக்கு தான் வருகிறது என்பது அசைக்க முடியாத உண்மை. ஆண்டுக்கு சுமார் 10,000கோடி ரூபாய் மதம் மாற்ற இந்தியாவில் செலவுசெய்யும் கிருஸ்தவ மிசினரிகள் இந்த செயல் என்ன சரி???
-41,844 NGO களில் 55% மேல் முறையாக கணக்கு காட்டவில்லை. இந்த முறையாக கணக்கு காட்டாத அனைத்து அமைப்புகளின் நிதி ஆதாரம் வரும் வழிகளை மோடி ஆட்சிக்குவந்த உடன் முடக்கிவிட்டார். இன்று இந்த மிசினரிகள் பெரிய அளவு கணக்குகாட்டவேண்டி இருப்பது அவர்கள் மதம் மாற்றும் வேலைக்கு பெரும் இடையூறாக இருக்கிறது.
மதம் மாற்றுவதற்கு தலைக்கு 3லட்சம் தர தயார் , மதம் மாற்றி பெயரை மாற்றா தேவையான Affidavit of Religion Conversion அனைத்து வேலைகளையும் செய்து கொடுக்க இங்கேயே ஆயிரம் கிருஸ்தவ இயக்கங்கள் வேலை செய்கின்றன. அவர்கள் கைகள் மிக பெரிய அளவில் கட்டபட்டுவிட்டன.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆலயங்களும் வரிந்து கட்டிகொண்டு மோடிக்கு எதிராக பிரச்சனைகளை அடுத்து அடுத்து தூண்டிவிட , அதற்கு பக்கா ஆதரவு சென்னையில் உள்ள கிருஸ்தவ கல்லூரிகளில் மாணவர்களை நாட்டை காப்பாற்ற என்ற மறைமுக போர்வையில் தூண்டிவிட்டுபோராட்டங்களை அடுத்து தூண்டிவிட்டு கொண்டே இருக்கும் இந்த சூழலில்.....
அப்படி வரும் 10,000கோடியை மருத்துவமனைகளாக கட்டினால் மாவட்டத்திற்கு 3 Multi Speciallity Hospital கட்டாலாமே????? என்று ஏன் விஜய் பேசக்கூடாது???? ஏன் அப்படி வசனத்தை அட்லீ எழுத கூடாது???
அதை விட்டுவிட்டு இந்துகளின் பல ஆண்டுகள் மன காயத்தில் ஏன் இந்த இயக்குனர் குழப்ப வேண்டும் என்று இந்துகள் கோவம் கொள்வதில் நியாயம் இருக்கா இல்லையா என்று நீங்களே உங்களை கேட்டு கொள்ளுங்கள்.
நடிகர் விஜய் ஒரு கிருஸ்தவர். அவர் கிருஸ்தவராக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை. அவருக்கு பிடித்த மதத்தில் அவர் இருக்கிறார்.
நடிகர் விஜய் ஒரு கிருஸ்தவர், UK குடியுரிமை பெற்ற கிருஸ்தவர் என்று நினைக்கிறேன். அவர் மகன் Jason ஞானஸ்தானம் எடுத்தது ஐரோப்பிய தேசத்தில். இவர் கிருஸ்தவர் இல்லை கூறுவது சும்மா அரசியல். இந்த படத்தை எடுத்த இயக்குனர் அட்லீ தனது எல்லா படத்திலும் கிருஸ்தவம் தூக்கி பிடிக்கும் காட்சிகளை வைப்பதாக கூறுவதிலும் உண்மை உண்டு.
இப்படி கூட்டணியில் கோவில்கள் கட்டுவதை வைத்து பேசுவது மாற்று மத உள்விவகாரத்தில் தலையிடுவது என்ன பிரச்சனை உருவாக்கும் வேலை தானே???
ஒருவேளை விஜய் அவர்களுக்கு தெரியாமல் அட்லீ ஏமாற்றி எழுதி இருக்கலாம், இல்லை சத்தியராஜ் - சீமான் என்ற செபாஸ்டீன் கூட்டணி வேலையாக இருக்கலாம். எது எப்படியோ கிருஸ்தவர்கள் - இந்து மக்களின் மத உள் விவகாரத்தில் குழப்புவது ஏற்புடையது அல்ல. இதனால் தான் விஜய் அவர்களின் மதம் இழுக்கபடுகிறது.
என்றாவது இந்துவாக வாழும் ரஜினி இப்படி மாற்று மத விவகாரங்களை காயபடுத்தியது உண்டா???? எனவே பெரிய நடிகர்கள் கவனமாக வசனங்கள் தேர்வு செய்யவேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
2)இந்தியா - சிங்கப்பூர் ஒப்பீடு:
நான் அடிக்கடி கூறுவது இதுவே - இந்தியாவுடன் சிங்கப்பூரை ஒப்பிடுவது ஒரு யானையை எலிகுட்டியுடன் ஒப்பிடுவதற்கு சமம்.
சிங்கப்பூர் மக்கள் தொகை வெறும் 56லட்சம். ஏறக்குறைய 58லட்சம்.
நம்ம சென்னை என்ற நகரத்தின் மக்கள் தொகை மட்டும் 88லட்சத்துக்கும் மேல். 2011 கணக்கெடுப்பின் புள்ளிவிவரம் பார்த்தால்கூட சென்னை மக்கள்தொகை 70லட்சம் மேல். வேலை தேட போய் செட்டில் ஆனவர்களை எல்லாம் சேர்த்தால் அது சுமார் 1.2கோடியை தொடும்.
சென்னையில் பாதி கூட கிடையாது சிங்கப்பூர்...
ஆக ஒரு திட்டம் செயல்படுத்த என்ன கஷ்டம் வந்துவிடும்???
பாடத்திட்டத்தில் ஒரு சின்ன தவறு என்றால் மொத்த புத்தகத்தையும் மாற்றி அச்சிட்டு மீண்டும் மாணவர்களுக்கு நாடு முழுவதும் கொடுக்க வேண்டும் என்றால் சுமார் ஒரு வாரம் போதும். ஆனால் இங்கே இந்தியாவில்???? சுமார் 100கோடி மக்கள் வாழும் தேசம்.. இந்தியாவின் Constitution முழுமையாக படித்து முடிக்க உங்களுக்கு 2 வருடம் ஆகும். அந்த அளவு அனைத்து தரப்பு மக்களின் உணர்வை பாதிக்காமல் உருவாக்கபட்டுள்ளது.
ரோடு போடுவது முதல் வரி நிர்வாகம் வரை எல்லாமே மிக குட்டி நாடு..
சுதந்திரம் சிங்கப்பூர் வாங்கிய போது அங்கே படித்த மக்கள் சதவீதம் 68%.. ஆனால் இந்தியாவெறும் 1947ல் 7% தான். அதுவும் ஒரு பெரிய பிரச்சனை.
பொது சிவில் சட்டம் கொண்டுவர கூடாது என்று கூப்பாடு போடும் இந்த கம்யூனிஸ்ட் - சீனாவில் ரஷ்யாவில் சட்டம் அனைவருக்கும் சமம் என்று இருக்கு என்று பேசி திரிவான் அதே வாயால். இந்தியா சிதற வேண்டும் என்று வெளிபடையாக கம்யூனிஸ்ட் பேசுவான், அது போல எவனாது சிங்கப்பூரில் பேச முடியுமா?
{அங்கே தூய்மை இந்தியா திட்டம் என்று கூறினால் அனைவரும் அதற்கு எப்படி ஒத்துழைக்க வேண்டும் என்று மீடியாக்கள் வழி நடத்தும். எனவே மக்களுக்கும் அரசுக்கும் ஒரு நல்ல தொடர்பை மீடியாக்கள் கொடுக்கும். ஆனால் இங்கே ???? அரசுக்கும் மக்களுக்கு எப்படி சண்டை இழுத்துவிடலாம், எப்படி மக்களை அரசு எடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைக்காமல் செய்யலாம் என்று தானே கம்யுனிஸ்ட் செய்திதாள்களான விகடன் முதல் தி இந்து வரை வேலை செய்கிறான். எவனாது மக்களுக்கு அரசு கூறும் நல்லவிசயத்தை கொண்டு சேர்த்தான்?}
இந்த படத்தில் பேசியது போல் அங்கே பேசினால் நீங்கள் தூக்கில் தான் தொங்கனும். ஏன் என்றால் அங்கே மீடியாக்கள் சுதந்திரமும் கிடையாது, பேச்சுரிமையும் கிடையாது. பேச்சுரிமையில் சிங்கப்பூர் 153வது இடம். அது தெரியுமோ??? தாய் நாட்டை அவமானம் செய்யும் விதமாக பேசினால் அங்கே அவன் காலி.
இந்த The Hindu, விகடன், NDTV இது போல சீனாவுக்கு ஆதரவாக செயல்படும் ஊடகங்கள் போல் சிங்கப்பூரில் கிடையாது.. இங்கே தி இந்து பாருங்க வெக்கமே இல்லாமல் சீனாவுக்கு சலாம் போடுவார்கள்.
அதில் GST 27% என்று பேசியது வடிகட்டிய முட்டாள்தனமான பேச்சு. இந்த பேச்சு தான் எனக்கு விஜய் நோக்கத்தின் மீது சந்தேகம் வரகாரணம் ஆகிறது. இது வேண்டும் என்றே பரப்பபட்ட பொய், அதை இவ்வளவு பிரபலமானவர் ஏன் பேசவேண்டும்??? என்ன காரணம்? இது முழுக்க முழுக்க நயவஞ்சகமான வசனம்.
வரி ஏய்பு செய்வது , ஹவால பணம் வெள்ளை ஆக்கும் வேலை எல்லாமே சினிமா துறை தான் செய்கிறது. அப்படி சிங்கப்பூரில் இல்லையே!! அதற்கும் தூக்கில் போடுங்கள் என்றால் இங்கே 90% நடிகை நடிகர்கள் தூக்கில் தான் தொங்கவேண்டும்.. சரி தானே?? எனவே ஒப்பீட்டு அளவிலும் சரி , மக்கள் சுதந்திரம் விசயத்திலும் சரி இந்தியா சிங்கப்பூர் என்று ஒப்பிடுவது மிக பெரிய முட்டாள்தனம்.
------------------------------------------------------------------------------------------------------------------
இறுதியாக :
விஜய் வைத்துள்ள கார்கள் , அவர் வாங்கும் சம்பளம் , அவர் குடும்பத்தின் UK குடியுரிமை , மதம் என்று எல்லாம் இன்று விவாதம் ஆக காரணம் முழுக்க இந்த திரைகதை அல்ல அவர் பேசிய அரசியல் வசனங்கள்& திரைகதையை உருவாக்கிய கிருஸ்தவ கூட்டணியும் தான் தவிர வேறு காரணம் அல்ல.
யாரை வேண்டுமானாலும் நம்புங்கள் ஆனால் மதம் மாற்றும் கிருஸ்தவ அமைப்புகளை ஒரு துளிகூட நம்பிவிட வேண்டாம். அதே போல் இந்த மதம் மாற்றும் கிருஸ்தவ அமைப்புகளை கண்டிக்காமல் , புத்திசாலிதனமாக நல்லவன் போல் இந்துகளின் மத உள்விவகாரத்தை பேசி திரியும் சீமான் , அட்லீ போன்றவர்களை நம்பிவிடவேண்டாம். ஏன் என்றால் இவர்கள் விசபாம்புகள்.
விஜய் அவர்களின் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அரசின் திட்டங்களை தவறு என்றால் எதிர்த்து குரல் கொடுங்கள் - உங்களுக்கு உரிமை உண்டு. அதற்கு முன் தகவல் சரியா என்று உறுதி செய்து கொள்ளவும். அதைவிட முக்கியம் இந்துகளின் மத உள்விவகாரத்தில் வரவேண்டாம் என்று கேட்டுகொள்வேன்.
-மாரிதாஸ்

No comments:

Post a Comment