Tuesday 31 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நதி போல ஓடிட.........
முதன் முதலாக ரயிலில் பிரயாணம் ஒரு கிராமத்துவாசி ...
தான் கொண்டு வந்த மூட்டைகளை 
தன் தலையில் ...
சுமந்து கொண்டு பிரயாணம்
செய்தானாம் ...
கீழே வைத்தால் ரயிலுக்கு அதிக பாரமாக
இருக்கும் என்று இப்படி செய்தானாம் ...
ரயில் அவனையும் அவனது மூட்டைகளையும்
சேர்த்துதான் சுமக்கிறது ...
அவன் அந்த மூட்டையை தலையில்
வைத்தாலும் ..
தரையில் வைத்தாலும் ரயிலுக்கு எந்த
மாற்றமும் ...
ஏற்படப் போவதில்லை என்பது அவனுக்கு
தெரியவில்லை ...
அதுபோலவே உன்னுடைய மனமும்
தேவையற்ற சுமை ...
நாள் முழுவதும் அந்த சுமையை
சுமந்து கொண்டு திரிகிறாய் ...
தேவையற்ற சமயத்தில் மனதை
கொஞ்சம் இறக்கி வைக்க தெரிந்து கொள் ...
ஒரு நிமிட நேரம் நீ அதை கீழே இறக்கி
வைக்க முடியுமானால் ...
உன்னுடைய முழு வாழ்க்கையும்
மாற்றப் பட்டு விடும் ...
அப்போது நீ பாரமின்றி இருப்பதை
உணர்வாய் ...
பாரமின்றி இருத்தல் உனக்கு சிறகுகள்
கிடைப்பது போல ...
அதன் மூலம் நீ இந்த வானத்துக்கும்
சொர்க்கத்துக்கும் பறக்கலாம் ...
ஆன்மிக வாழ்வில் நீ பாரமற்றவனாக
பறந்து கொண்டும் ...
ஒரு நதியைப் போல் ஓடிக் கொண்டும்
இருக்கலாம் ...
ஓஷோ ...
வெறும் கோப்பை ...
நன்றி அரு லெட்சுமணன்

No comments:

Post a Comment