Friday 20 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தமிழ் பெயர் வைத்தால்
தப்பா?
ஒரு இனம் அழிய அந்த
மொழியை அழித்து விடு 
என்பார்கள்..அதுதான் இப்ப
தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.
ஆங்கிலேயர்கள் போய்விட்டாலும்
ஆங்கிலத்திற்கு இன்னும் அடிமையாகத்தான் இருக்கிறோம்.
ஆங்கிலம் உலக மொழி..
தெரிந்து கொள்ள வேண்டிய மொழி
என்பது நூற்றுக்கு நூறு உண்மை..
ஆனால், பிரச்சினை என்னவெனில்
குழந்தைகள் பெயர், பொருட்களின்
பெயர் என எல்லாமே ஆங்கிலம்
என்றால், எப்படி?
நமக்கே என்ன தோன்றல் வந்துவிட்டது!
நம்ம தமிழ் மொழியில் பெயர் வைத்தால்
அது ஏதோ தரம் குறைந்த்தாக நினைக்க
வைத்து விட்டார்களே!
நம்ம வீடுகளில் உபயோகப் படுத்தும்
அன்றாட சமையல் பொருட்களில்
இருந்து எடுத்துப் பாருங்கள், பெருமளவு
ஆங்கிலப் பெயரோ அல்லது
இந்திப் பெயரோ இருக்கும்...
லேஸ், குர்குரே, ஹல்திராம் என்று பல
நம்ம பாசிப்பருப்பையே மூங்க்தால்
என்று போட்டிருப்பார்கள். இன்னும்
இதுபோல் பல...
பல வருடங்கள் ஆங்கிலேயன்
ஆண்டதால் ஆங்கிலம் இருக்கும்..
ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாய்
நம் மொழியை பயன்படுத்தினால்
என்ன ? என்பதே ஆதங்கம்.
ஆங்கிலப் பள்ளி, நர்சரி பள்ளி என்று
சின்ன வயதிலேயிருந்து ஆங்கிலத்தை
திணித்து, வருங்கால தமிழர்களே
இல்லாமல் செய்வது ஒரு பக்கம்...
இதுபோல வியாபாரம் மூலமாக
மொழி அழிந்து வருகிறது..
இடையில் இந்தித் திணிப்பு வேற..
அதை ஆதரிக்கும் தமிழர்கள் ஒருபுறம்..
என்ன கொடுமை என்றால்
தமிழ்நாட்டில் படங்களுக்கு
தமிழில் பெயர் வைக்க ஊக்கத்தொகை
தமிழில் அர்ச்சனை செய்யப்படும்
என்ற விளம்பரம் வேற!
வீடுகளில் ஆங்கிலப் பேச்சு
அதிகமாகிவிட்டது.. பேச்சு
வழக்கிலிருந்து கொஞ்சம்
கொஞ்சமாக தமிழ் மறைந்து வருகிறது.
எதையும் கண்டு கொள்ளாமல்
இளைய தலைமுறை மதுமயக்கத்தில்.
மொழியை அடிமைப் படுத்த
ஒத்துழைக்கும் அரசியல் அடிமைகள்.
ஆளும் அடிமைகள் மறுபுறம்.
தமிழ்க்கடவுளே முருகா
காப்பாத்து தமிழையும்,
தமிழ் நாட்டையும்,
தமிழர்களையும்.
குத்தூசி

No comments:

Post a Comment