Wednesday 29 December 2021

பிழை சொல்லும் மேதாவிகள்.

 பிழை சொல்லும் மேதாவிகள்.

ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர்
அந்தத் தந்தையும் மகனும் சென்ற ரயில் பெட்டியில் கூட்டம் அதிகம் இல்லை.
அவர்களுக்கு முன்னே நாகரீகமாக உடையணிந்தவர்கள் இரண்டு பேர் அமர்ந்திருந்தனர்
வண்டியில் அமர்ந்திருந்த கிராமத்தைச் சேர்ந்தவரின் மகனுக்கு சுமார் இருபது வயதிருக்கும்.
நல்ல ஆரோக்யமாகவும் அழகாகவும் இருந்தான்.
இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் நட்புடன் சிரித்தான்.
அவர்கள் கையிலிருந்த அழகிய சூட்கேசைத் தடவிப் பார்த்தான்.
வண்டி புறப்பட்டவுடன் மகிழ்ச்சியுடன் இங்கும் அங்கும் மாறி மாறி அமர்ந்தான்.
தன் தந்தையிடம் மகிழ்ச்சியுடன்'
''அப்பா, கீழே மரமெல்லாம் எதிர்ப்பக்கம் ஓடுது" என்றும்,அப்பா, அப்பா, டேஷன்லே வண்டி நிக்குதுப்பா.
அப்பா எவ்வளோ பூ அங்கே அந்த மரத்துல இருக்குதுப்பா."என்றும் அவன் சிறு குழந்தை போல் மகிழ்ச்சிப் பெருக்கில் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தான்.
அவன் தந்தையும் அவனுடைய மகிழ்ச்சியில் பங்கெடுத்தவராய் அவனுடன் சேர்ந்து கொண்டார்,
இவர்கள் இருவரின் பேச்சையும் நடத்தையையும் பார்த்து அந்த நாகரீக மனிதர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
"பாவம் இவ்வளவு நன்றாக இருக்கும் பையனுக்கு மூளை வளர்ச்சி இல்லையே.
இந்தப் பையனை மருத்துவரிடம் காட்டி சரி செய்யாமல் அவனுடன் சேர்ந்து அவன் தந்தையும் அவனுக்குச் சரியாய் நடந்து கொள்கிறாரே . என்று சலித்துக் கொண்டனர்.
இவரது பேச்சைக் கேட்ட அந்த நாகரீக மனிதர்கள் பொறுக்க முடியாமல் அவரைப் பார்த்து,
'',அய்யா., இப்படி இருக்கிற பையனை டாக்டர் கிட்ட காட்டாமே இருக்கிறீர்களே." என்றார்கள்..
அந்தப் பையனின் தந்தை புன்னகை புரிந்தார்
"ஐயா, நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிட்டீங்க. என் மவனுக்கு மூளை நல்லா இருக்குதுங்கோ.விவரம் தெரிஞ்ச நாளிலேயிருந்து அவனுக்குக் கண்பார்வை இல்லை..
போன மாசம் தான் இவனுக்கு கண் அறுவை முடிஞ்சுதுங்க.
உங்களைப் போல ஒரு புண்ணியவான் கண்தானம் செஞ்சதாலே இவனுக்குப் கண்பார்வை வந்திட்டுதுங்க.
அதனாலே எல்லாத்தையும் புதுசாப் பார்க்கற மகிழ்ச்சியில் அவன் பேசிட்டானுங்க.
நீங்க தப்பா எடுத்துக்காதீங்க." என்றார்.,
ஆம்..,நண்பர்களே
யாவற்றையும் மேம்போக்காக அறிந்து கொண்டு' மற்றவர்கள் மீது பிழை சொல்வதை தவிர்த்து யாவற்றையும் தீர விசாரித்து அறிவதே மேல்.
ஆம்., கண்ணால் பார்ப்பதும் பொய்,
காதால் கேட்பதும் பொய்,
தீர விசாரித்து அறிவதே மேல்.

No comments:

Post a Comment