Wednesday 15 December 2021

நம்பிக்கை ஒளி.

 நம்பிக்கை ஒளி.

நீங்கள் அக்கறை கொண்ட ஒருவர் துன்பத்தில் துவளும்போது, உடனடியாக ஒரு தீர்வைக் கண்டு அவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள்.
உற்சாகப் படுத்துங்கள்.. .
சில வாய்ப்புகளில், வலியைப் போக்கக்கூடிய ஒரே மருந்து!, உங்கள் அன்பான ஆறுதல் வார்த்தைகளே. அவர்களுக்கு ஆறுதல் சொல்லி நல்ல ஆலோசனை வழங்குங்கள்...
அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி, ஒருவர் மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்...
ஒரு கிராமத்தில் ஒருவர் இரும்பு பொருட்கள் செய்து, அதை விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். அவருக்கு அன்பும், அழகும் நிறைந்த மனைவி இருந்தார்...
மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் சோதனை காலம் வந்தது. அவர் செய்து கொண்டு இருந்த தொழில் நலிவடைந்தது.
இதனால்!, வருமானம் குறைந்து உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது. இதனால் அவர் மனதில் விரக்தியும்,;கவலையும் குடிக்கொண்டது...
ஒருநாள் அவர் மாலை வேளையில் வானத்து விண்மீன்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் ஓடியது ...
இதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினார். என்னங்க!, எதற்காக இப்படி கண்கலங்குறீர்கள். இந்தத் தொழில் இல்லையெனில் என்ன!?, அடுத்த காட்டில் சென்று விறகு வெட்டி, அதனை, அடுத்து இருக்கின்ற கிராமத்தில் விற்றால் பணம் கிடைக்குமே!. அதனை வைத்து நாம் வாழலாமே என்றார்...
மனைவியின் ஆறுதல் அவருக்குப் புது நம்பிக்கை, புது உற்சாகத்தை கொடுத்தது...
அடுத்த நாளே காட்டிற்குச் சென்று விறகுகளை வெட்டி விற்று வந்தார். இந்தத் தொழிலால் அவருக்கு ஓரளவு வருமானம் கிடைத்தது. இருந்தாலும் அவரது மனதில் சற்று சோகமும் இருந்தது...
மனைவி ஒருநாள் தன் கணவனிடம், என்னோட நகைய விற்றால் கொஞ்சம் பணம் கிடைக்கும். அதை மூலதனமாக வைத்து நாம் ஒரு விறகுக் கடை வைக்கலாம். கடை வைத்துவிட்டால் எந்த நேரமும் மக்கள் விறகு வாங்குவதற்காக வருவார்கள், நமக்கும் நல்ல வருமானம் கிடைக்கும் என்றார்...
இதைக்கேட்டு அவர் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றார். விறகு வெட்டியாக இருந்தவர் விறகுக்கடை முதலாளி ஆனார். இதனால் வருமானம் பெருகியது. மகிச்சியுடன் குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கயில், மீண்டும் அவரது வாழ்க்கையில் சோதனை ஆரம்பித்தது...
திடீரென்று ஒருநாள் அவரது விறகுக்கடையில் தீப்பிடித்து, அத்தனை மூலதனமும் கரிக் கட்டையாகி விட்டது. இதைக்கண்டு கதறி அழுதார். நண்பர்கள் பலரும் வந்து அவருக்கு ஆறுதல் கூறினார்கள்...
மனைவி கணவனின் கண்ணீரைத் துடைத்து, இப்போது என்ன நடந்துவிட்டதென்று அழுகிறீர்கள், விறகு எரிந்து வீணாகவில்லையே, கரியாத்தானே ஆகியிருக்கிறது...
நாம் நாளையிலிருந்து கரி வியாபாரம் செய்வோம் என்றார், இதைக்கேட்ட பின் அவருக்கு தனது வாழ்க்கையில் மீண்டும் நம்பிக்கை ஒளி தெரிந்தது...
ஆம் நண்பர்களே
ஆறுதல் கூறவும், ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தவும் ஒருவர் நம்முடன் இருந்தால் விண்மீனையும் எட்டிப் பிடித்துவிடலாம்.
வாழ்க்கையில், நமக்கு ஏற்படும் துன்பத்தில் இருந்து மீள ஏதேனும் ஒரு வழி இருக்கும். அதனை சரியான தருணத்தில் பயன்படுத்தினால் உறுதியாக வாழ்வில் வெற்றி பெறலாம்.
Iyyappan Thiyagarajan
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment