Monday 27 December 2021

மதுரை மக்கள் தொடர்பு அதிகாரிகள் கூட்டமைப்பு நடத்திய முப்பெரும் விழா நேற்று காலை கோச்சடை குயின் மீரா இண்டர்நேஷனல் பள்ளியில்

முப்பெரும் விழா.
மதுரை மக்கள் தொடர்பு அதிகாரிகள் கூட்டமைப்பு நடத்திய முப்பெரும் விழா நேற்று காலை கோச்சடை குயின் மீரா இண்டர்நேஷனல் பள்ளியில் அமைப்பின் தலைவர்
ஜெ. முரளி தலைமையில் நடைபெற்றது.
குழு உறுப்பினர் எஸ். கோகுலநம்பி வரவேற்புரை ஆற்றினார், துணைத் தலைவர் டி. முருகேசன் அறிமுக உரை ஆற்றினார், நல்லாசிரியர் விருது பெற்ற ஆண்டார் கொட்டாரம் பள்ளி எஸ். லதா அவர்களுக்கு பாராட்டு நடைபெற்றது.
புத்தாண்டு கேக் வெட்டியும் காலண்டர் வெளியீடும் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக குயின் மீரா இண்டர்நேஷனல் பள்ளியின் சேர்மன் முனைவர் சி. சந்திரன் பங்கேற்று வாழ்த்தினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் பண்பட்ட வாழ்க்கை என்ற தலைப்பில் 51 நிமிடங்கள் சிறப்புரை ஆற்றுகையில் தங்கம் சாதிக்காததை சங்கம் சாதிக்கும், கால மாற்றத்திற்கு ஏற்ப நமது பணிகள் அமைவது அவசியம். பிஆர்ஓ பணி என்பது கடினமான ஆனால் மேன்மையான பணி.
நிறுவனத்தின் உயர்வையும் வாடிக்கையாளர்கள் பயனாளிகள் நலனையும் ஒரு சேர இணைத்திடல்.
இப்படிப் பன்முகப் பணியை தொடர்ந்து ஆற்றிடவும் குடும்பம், நிறுவனம் இரண்டின் நலனுடன் சமூக அக்கறையும் உள்ள அமைப்பாக இது தொடர்ந்து பயணப்பட வாழ்த்துகின்றேன் என்றார்.
பள்ளி நிர்வாகி சி. அபிநவ், முதல்வர் சுஜாதா, வாப்ஸ் அமைப்பின் நிர்வாகி இளமதி உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்வை திருமதி சக்தி தொகுத்து வழங்கினார்.
குழு உறுப்பினர் ஜி. சந்தான கிருஷ்ணன் நன்றி கூறினார்.

விழா ஏற்பாடுகளை பொருளாளர் சரவணன், பாஸ்போர்ட் அலுவலக சீனிவாசன், வையாபுரி உள்ளிட்ட உறுப்பினர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். 
















No comments:

Post a Comment