Thursday 23 December 2021

ஒவ்வொரு நாளும் நல்ல நாள் தான்.

 ஒவ்வொரு நாளும் நல்ல நாள் தான்.

இந்த உலகத்தில் நம்முடைய வாழ்க்கைப் பயணம் என்பது மிக மிகச் சிறியது. பூமி எப்படித் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனைச் சுற்றிவருகிறதோ, எப்படி ஒவ்வொரு கோளும் அதனுடைய பாதையில் பயணிக்கிறதோ, எப்படி ஒவ்வொரு உயிரினமும் அதனுடைய வாழ்கைப் பயணத்தில் நகர்ந்துகொண்டே இருக்கிறதோ, அப்படித்தான் மனித வாழ்க்கை என்பதும் இயற்கையுடன் ஒன்றிய ஒரு சிறிய பயணம். உண்மையில் இந்த வாழ்கைப் பயணம் என்பது ரொம்ப ரொம்பச் சின்னது, நம்ம வாழ்கை யாருக்காகவும் எதற்காகவும் எப்போதும் நிற்காது.
வாழ்கை என்பது யாரையும் கேட்காமல் போய்கிட்டே இருக்கும். நமக்குப் பிடிக்குதோ இல்லையோ, மகிழ்ச்சியோ துக்கமோ, வேலை இருக்கோ இல்லையோ, நினைத்தது நடந்த சந்தோசமோ, நம்ம நினைத்தது நடக்காத துக்கமோ , நடப்பது எதுவாக இருந்தாலும் இந்த பூமி சூரியனைச் சுற்றும் வரை, நம்முடைய வாழ்க்கை நகர்ந்துகொண்டே இருக்கும் நமக்கே தெரியாமல்.
இந்த உலகத்துல இரண்டு விதமான மனிதர்கள், ஒன்று வாழ்க்கை புரியாம வாழ்றவுங்க, மற்றவர்கள் வாழ்க்கையைப் புரிஞ்சுக்கிட்டு வாழ்றவுங்க. இந்த இரண்டு பேரோட வாழ்கை முறை ரெம்பவே வித்தியாசப்படும் . நம்ம இதிகாசங்கள், மத, முன்னோர்கள் எல்லாரும் சொல்கிற ஒரு கடைசி துளி அமிர்தம் “வாழ்க்கையைப் புரிஞ்சுக்கிட்டு வாழுங்கள், வாழ்க்கையைப் புரிஞ்சுக்கிட்டு சந்தோசமா வாழுங்கள்”.என்பதாகும் .
வாழ்க்கையிலே நாம விரும்புகிறோமோ இல்லையோ ஒவ்வொரு நாளும் நகர்த்து கொண்ட போகும், நம்ம வாழ்கைப் பயணம் குறைந்துகொண்டே வரும். தேவையில்லாமல் சின்னச் சின்ன விசயத்துக்கு எல்லாம் பெரிய பெரிய சண்டையைப் போட்டு காலத்தை வீணாக்காமல், இதுதான் வாழ்க்கை என்று காரணத்தைப் புரிந்துகொண்டு வாழப் பழகிக்கொண்டால் , ஒவ்வொரு நாளும் நல்ல நாள் தான்.
கொஞ்சம் வித்தியாசமா உங்கள் வாழ்க்கையைப் பாருங்க, என்னதான் செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்று கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. மனத்தளவில் முதிர்ச்சி அடையுங்க, வாழ்க்கையை எதார்த்தமா பாருங்க, சந்தோசமா வாழுங்கள்.

No comments:

Post a Comment