Monday 6 December 2021

மனதை ஒருமுகப்படுத்தும் கலை.

 மனதை ஒருமுகப்படுத்தும் கலை.

ஓர் இளைஞருக்கு ஞானி ஆகவேண்டும் என ஆசை நேர்ந்தது. அதற்காக ஒரு மகானைச் சந்தித்து, "சுவாமி! உங்களைப் போல் நானும் மகான் ஆக வேண்டும். நீங்கள் இந்த நிலையை அடைவதற்கு என்ன பயிற்சி செய்வீர்கள்?'என்றார். அதற்கு அந்த மகான், "நான் உண்கிறேன், உறங்குகிறேன், தியானம் செய்கிறேன், உபதேசிக்கிறேன்' என்றார்.
இளைஞனுக்கு ஆச்சரியம் கலந்த சிரிப்பு உண்டாகியது. "சுவாமி! இந்த உலகில் உள்ள அனைவரும் இதைத் தானே செய்கிறார்கள். அப்படியென்றால், அவர்களால் ஏன் மகானாக முடியவில்லை?' என்றார்.
அது உண்மைதான். அவர்களுக்கும் எனக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம், அவர்கள் ஒரு செயலை செய்கின்றபொழுது முழுவதுமாக
அதில் ஒருமுகப்படுத்துவது
மனதை இல்லை.
எடுத்துக்காட்டாக உணவு அருந்தும்போது தொலைக்காட்சி பார்ப்பார்கள், பேசுவார்கள். உறங்கும்போது தேவையில்லாதவற்றைச் சிந்திப்பார்கள். இவ்வாறாக ஒவ்வொரு பணியின் போதும், அதற்குத் தொடர்பில்லாத மற்றொரு பணியின் மீது அவர்களது மனம் அலைபாயும். ஆனால் நான் உண்ணும் பொழுது அதைத் தவிர, வேறு எதையும் நினைப்பதில்லை. உறங்கும் பொழுது நன்றாகவே உறங்கி விடுவேன். தியானம் செய்யும் பொழுது அதிலேயே என் மனம் இருக்கும்' என்று பதிலளித்தார்.
மனம் லயித்து "ஒன்றிணைந்திருப்பதுதான் மனதை ஒருநிலைப்படுத்துதல்' என்பதைப் புரிந்து கொண்டார் அந்த இளைஞர்.
அதேபோல் மனதை ஒருமுகப்படுத்தும் போது மனதும் உடலும் இளமையாகிறது. இதனை ஆராய நியூஸ்வீக் (News Week) என்னும் பத்திரிகையினர் சராசரியாக வயது 80 வயது உள்ள முதியவர்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அவர்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்தனர்.
முதலாம் பிரிவினருக்கு மனதை ஒருமுகப்படுத்தும் பிரிவினருக்கு தியானம் கற்றுத் தந்தனர். இரண்டாம் பிரிவினருக்கு உடலை இலகுவாக்கும் பயிற்சி (Relaxation) அளித்தனர். மூன்றாம் பிரிவினருக்கு எந்த விதப் பயிற்சியும் அளிக்க வில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்களின் ஆராய்ச்சியில் தியானப்
பயிற்சியை மேற்கொண்டவர்கள்
அனைவரும் உயிரோடு இருந்தனர். உடலை
இலகுவாக்கும் பயிற்சி
மேற்கொண்டவர்களில் 88 சதவீதம் பேர்
உயிரோடு இருந்தனர்.
மன ஒருமைபாட்டிற்கு தியானமும் ஒரு கருவி.

No comments:

Post a Comment