Wednesday 1 February 2023

தைப்பூச சிறப்புக்களும் விரதம் இருக்கும் முறைகளும்.

 தைப்பூச சிறப்புக்களும்

விரதம் இருக்கும் முறைகளும். 🌿🌹
🌹 🌿 முருகப் பெருமானை வழிபட செவ்வாய் கிழமை, சஷ்டி திதி ஆகியன சிறந்த நாட்களாகும். இதே போல் முருகப் பெருமானின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் நான்கு நட்சத்திரங்களில் அவரை வழிபட்டாலும் அனைத்து விதமான நன்மைகளும் நடக்கும். முருகனையும், முருகன் கையில் இருக்கும் வேலையும் வணங்குவோருக்கு பயம், தோல்வி ஏற்படாது. வறுமை நீங்கும்.
🌹 🌿 தைப்பூச திருநாளில் உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பால் குடங்கள், பல விதமான காவடி, தேரோட்டம் ஆகியன நடத்தப்படுவது வழக்கம். தைப்பூசத்தன்று வேல் குத்தியும், காவடி தூக்கியும் முருகனை வழிபடுவது பல காலமாக வழக்கத்தில் உள்ளது.
🌹 🌿 முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விரத நாட்களில் வைகாசியில் வரும் விசாகம், பங்குனியில் வரும் உத்திரம், தை மாதத்தில் வரும் பூசம், கிருத்திகை, ஆகிய நான்கு நட்சத்திரங்களும் மிக விசேஷமானவை. வைகாசி விசாகம் முருகனின் பிறந்த நட்சத்திரம், பங்குனி உத்திரத்தன்று முருகன் தெய்வாணையை மணம் முடித்த நாள், கிருத்திகை ஆறுமுகம் கொண்ட உருவத்தை சக்தி ஒரே உருவமாக இணைத்த தினம். தைப்பூசம், பார்வதியிடம் இருந்து முருகன் வேலை பெற்ற தினம் என்பார்கள்.
🌹 🌿 இவ்வாறு பல சிறப்புக்களைக் கொண்டதால் தைப்பூச விழா மிகவும் பிரபலமாக உள்ளது. உலக அளவில் முருக பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாவாக தைப்பூசம் உள்ளது. பெரும்பாலானவர்கள் தைப்பூசத்தை முன்னிட்டு 48 நாட்கள் விரதம் இருப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். மார்கழி மாதம் துவங்கி, தைப்பூசம் வரை விரதம் மேற்கொள்வார்கள்.
🌹 🌿 ​பழனி முருகன் கோவிலில் திடீரென குவியும் பக்தர்கள் கூட்டம் : காரணம் என்ன?​
தைப் பூசத்திற்கு அப்படி என்ன சிறப்பு?
🌹 🌿 தைப்பூச நாளில் தான் பூமியில் நீர் தோன்றி, அதிலிருந்து உயிர்கள் தோன்ற துவங்கியதாக புராணங்களும், சாஸ்திரங்களும் சொல்கின்றன. தைப்பூச நாளில் தான் முருகப் பெருமான் தனது தந்தையான சிவ பெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் தெய்தார். பராசக்தியிடம் இருந்து வேல் வாங்கி, கையில் வேல் தாங்கி முருகன் நின்ற தினம் இன்று தான். அகத்தியருக்கு முருகப் பெருமான் தமிழை கற்பித்ததும் இந்த நாளில் தான் என புராணங்கள் சொல்கின்றன. சிதம்பரம் நடராஜர், ஆனந்த தாண்டவம் ஆடி பிரம்மா, விஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்கு காட்சி கொடுத்த நாளும் தைப்பூச தினம் தான்.
🌹 🌿 தைப்பூசம் 2023 எப்போது?
🌹🌿 தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பெளர்ணமி திதியும் இணையும் நாளை தைப்பூசம் என்கிறோம். 2023 ம் ஆண்டு பிப்ரவரி 05ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 04 ம் தேதி இரவு 10.41 மணி துவங்கி பிப்ரவரி 06 ம் தேதி அதிகாலை 12.48 வரை பெளர்ணமி திதி உள்ளது. இதே போல் பிப்ரவரி 04 ம் தேதி காலை 10.41 துவங்கி பிப்ரவரி 05 ம் தேதி பகல் 01.14 வரை பூசம் நட்சத்திரம் உள்ளது. பிப்ரவரி 05 ம் தேதியே நாள் முழுவதும் பெளர்ணமி உள்ளதால் அந்த நாளே தைப்பூச நாளாக கருதப்படுகிறது.
🌹 🌿 தைப்பூச விரதம் இருக்கும் முறை :
🌹 🌿 * அதிகாலையில் எழுந்து, நீராடி, நெற்றியில் திருநீறு அணிந்து, முருகன் படத்திற்கு முன் விளக்கேற்ற வேண்டும்.
🌹 🌿 * காலை, பகல் இரு வேளையும் பால், பழம் மட்டுமே அருந்த வேண்டும்.
🌹 🌿 * இருவேளையும் கோவிலுக்கு செல்வது சிறப்பானது.
🌹 🌿 * முடியாதவர்கள் மாலையில் மட்டுமாவது கோவிலுக்கு சென்று முருகனை வழிபட வேண்டும்.
🌹 🌿 * தைப்பூசத்தன்று முருகன், சிவன், குரு பகவான் ஆகியோரை வழிபடலாம்.
🌹 🌿 * முருகனுக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், பால் பாயசம் இவற்றில் ஏதாவது ஒன்றை படைத்து வழிபடலாம்.
🌹 🌿 * தைப்பூசத்தன்று வேல் வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை தரும்.
🌹🌿என்ன மந்திரம் சொல்ல வேண்டும்?
தைப்பூசத்தன்று நாள் முழுவதும் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கந்தர் கலி வெண்பா ஆகிய பாடல்களை பாராயணம் செய்யலாம். முடியாதவர்கள் "ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கலாம்.
🌹 🌿 தைப்பூச விரதமிருந்தால் என்ன பலன்?
🌹 🌿 தைப்பூசத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், செல்வம் பெருகும், கணவன்- மனைவி ஒற்றுமை சிறக்கும், தொட்ட காரியம் அனைத்தும் பூரணமாக நிறைவேறும்.

No comments:

Post a Comment