Wednesday 1 February 2023

இதுதான் பாதை.

 இதுதான் பாதை.

பொதுவா நமக்கோ,நம்மைச் சார்ந்தவர்களுக்கோ அல்லது நம்மை சுற்றிலும் இருக்கும் அனைத்துமே என்று எங்கயுமே நாம நெனச்ச மாதிரி நடப்பதே இல்லை.
ஏதோ ஒரு விதமா நமது எதிர்பார்ப்புக்கு மாறாகவே நடக்கிறது.
ஆனாலும் வாழ்கை அதுபாட்டுக்கு போய்க் கிட்டே தான் இருக்கு.
வாழ்கை என்பதே நமக்குப் புரியாத ஒன்றாய் இருக்கிறது .ஒரு சமயம் எல்லாமே நம்ம கையில இருக்கிற மாதிரி இருக்கு. இன்னொரு சமயம் எதுவுமே நம்ம கையில இல்லாத மாதிரியும் இருக்கு.
மொத்தத்தில் வரும். ஆனா வராது கதை தான். எப்படித் தான்
வாழ்வதோ என்று தலையில் அடித்துக் கொள்ளத்தான் தோன்றுகிறது.
நாம் பார்க்கின்ற படங்கள், படிக்கின்ற கதைகள் எல்லாமே நம்ம
கற்பனைக்கு அப்பாற்பட்டதா இருக்கு.
கதை எழுதினவனின் கற்பனைப் படி அது அப்படி கன்னாபின்னா என்று இருக்கும்.
நம் வாழ்க்கையும் அப்படித் தான்.
யாரோ எழுதின கதைப் படி நடக்கிற மாதிரி இருக்கு.நாம நெனச்ச மாதிரி இல்லாம ஏகப்பட்ட ட்விஸ்ட்கள். எப்படி இருந்தா என்ன கதை தானே என்று நமது வாழ்வை நம்மால் வேடிக்கை பார்க்க முடிவதில்லை.
ஏதோ சிவாஜி படம் பார்க்கிற மாதிரி அதிலேயே லயிச்சுப் போயி அழுது , சிரித்து என்று அதோடு ஒன்றிப் போய் விடும்.
அந்தக் காலத்தில கவாஸ்கர்ன்னு ஒருத்தர் இருந்தார் . அவர் கிரிக்கெட் விளையாடும் போது , காலையில் இருந்து சாயங்காலம் வரை விளையாடி 50 ரன் எடுப்பார் .
எந்தப் பந்தையும் அடிக்கிறதில்லை. அவுட் ஆயிறுவாராம். அதனால சும்மா தட்டிக் கிட்டே இருப்பார்.நல்ல பந்தா வந்தா மட்டும் அடிப்பார் . இதுக்கே அவரை ஆஹா....ஓஹோ.... என்று தலையில் வைத்துக் கொண்டு கொண்டாடினார்கள்.
அவரு கேப்டனா இருந்தப்போ ஒரு மேட்சை கூட ஜெயிக்கணும்னு வெளயாண்டதே கெடயாது. தோக்கக் கூடாது அவ்வளவு தான். முடிஞ்சா மேட்சை டிரா பண்ணிடனும்.
அந்த நேரத்தில் தான் ஸ்ரீகாந்த் என்று ஒருத்தர் வந்தார் .சும்மா மூக்க மூக்க உருஞ்சிக் கிட்டே இருப்பார் .
எந்த பால் வந்தாலும் அடி தான். வந்தா போர் .இல்லன்னா அவுட் அப்படீன்னு ஆரம்பிச்சார் .
அவ்வளவு தான் மொத்த இந்தியாவும் ஸ்ரீகாந்த் பின்னாடி போயிடுச்சி.
அப்புறம் அந்த மாதிரி கபில்.
நிஜத்தில் இவங்க ரெண்டு பேரும் வந்த பின்னாடி தான் இந்தியா கிரிக்கெட்டே விளையாட ஆரம்பிச்சது.
உலகமே கிண்டலா பாத்த இந்தியா டீமப் பாத்து இன்னிக்கு உலகமே அரண்டு போய் பாக்குது.
நாம எல்லாமே கவாஸ்கர் மாதிரி டிபென்ஸ் ஆட்டம் தான் ஆடிக் கிட்டு இருக்கோம். ஸ்ரீகாந்த் மாதிரி என்ன வேணா வரட்டும்னு துணிஞ்சு விளையாடப் பழகணும்.
வாழ்க்கையை அப்படித் தான் எதிர் கொள்ள வேண்டும்.
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்.
All reacti

No comments:

Post a Comment