Tuesday 28 February 2023

அச்சம் கவலை வெறுப்பு . . .

 அச்சம் கவலை வெறுப்பு . . .

நமக்கு ஏற்பட்ட சிக்கல்களின் ஆரம்பமான இடத்தை விட்டுப் பல நேரங்களில் நாம் தீர்வுகளை எங்கோ தேடுகின்றோம்.
ஆம் சிக்கல்களுக்கான தீர்வை நம்மிடம் தேடுவதை விடுத்து வெளியில் தேடுகின்றோம். நாம் என்ன தவறு செய்தோம். எதனால் இந்த சிக்கல்கள் நேர்ந்தது என்று சிந்தித்துத் தெளிவு பெறுவதில்லை.
சரி நாம் தான் சிக்கல்களுக்கு கட்டியங்காரனாக இருந்து விட்டோம், சிக்கல்கள் நேர்ந்தவுடன் அதை உறுதியாக எதிர்கொள்கிறோமா. என்றால் அதுவும் இல்லை. (கட்டியங்காரன் - சூத்திரதாரி)
ஆனால் எல்லாவற்றுக்கும் தீர்வு ஒன்று இருக்கிறது, மாற்று வழிகள் பல உண்டு’ என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். தீர்வு இல்லாத சிக்கல் என்று எதுவுமில்லை.
காலம் எதற்காகவும் எவருக்காகவும் காத்திருப்பது இல்லை. வாழ்க்கை ஒரு வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடருவதும் இல்லை.
அச்சம், கவலை, வெறுப்பு, போன்ற குப்பைகளை நம் மன வீட்டிலிருந்து தூக்கி எறியாவிட்டால் வாழ்க்கை நிறைவு பெறாது.
எல்லா பூட்டுகளுக்கும் சாவி உண்டு, அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு உண்டு.
வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே. அதைக் கண்டு அஞ்சுவது அறிவுடைமை ஆகாது, அவற்றை எதிர்கொள்வதே சிறந்தது.
கவலையுறுவதால் மட்டுமே சிக்கல்களில் இருந்து விலக முடியாது, இன்னும் கூற வேண்டுமானால், கவலையுறும் பொழுது சிக்கல்கள் இன்னும் பெரிதாகி விடும்.
தீர்க்கவியலாத துன்பம் வாழ்க்கையில் ஏதுமில்லை, ஆனால் அவற்றைத் தீர்க்க வழிமுறைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம்...
திறக்க முடியாத பூட்டுகள் ஏதுமில்லை, அதற்கான சாவியைத் தேடிப்பிடித்தால் போதும்.

No comments:

Post a Comment