Thursday 9 February 2023

புத்திசாலி அறிவாளி . .

 புத்திசாலி அறிவாளி . .

எந்தச் சூழ்நிலையையும் எவ்வாறு புத்திசாலித்தனம் கொண்டு அணுகுகிறோம் என்பதில் தான் பிரச்னைக்குத் தீர்வு இருக்கிறது.
எந்தப் பிரச்சனை வந்தாலும் அதைத் தம் பலம் கொண்டு சீர் செய்து விட முடியும் என்று சிலர் எண்ணுகிறார்கள்.
ஆனால் பலத்தைக் கொண்டு அனைத்தையும்
சீர் செய்து விட முடியாது.
நீங்கள் எப்படி ஒரு சில சூழ்நிலைகளை அணுகுகின்றீர்கள் என்பதில் உங்களுடைய மன ஆற்றல் மேம்படுகின்றது. நீங்கள் புத்திசாலி மற்றும் அறிவாளியாக, உங்களுடைய ஈடுபாடும், ஆற்றலும் மட்டுமே தேவை.' வேறு எதுவும் தேவையில்லை.
கிராமத்தில் வசித்த பால்காரர் ஒருவர் தான் வளர்க்கும் பசு ஒன்றை இழுத்துக் கொண்டு ரோட்டில் செல்கிறார். அப்போது திடீரென அந்தப் பசு ரோட்டில் அமர்ந்து விடுகிறது. கிராமத்தின் சாலை மிகவும் சிறியது என்பதால் பசு அமர்ந்த பிறகு அதில் வெறும் மிதிவண்டியும் பைக்கும் மட்டுமே செல்ல இடம் இருந்தது.
என்னடா இது நேரம் காலம் தெரியாமல் நம் பசு இப்படி இங்கு நடு ரோடில் அமர்ந்து கொண்டதே என்று எண்ணிய அந்தப் பால்காரர் அதை எழுப்ப எவ்வளவோ முயற்சி செய்கிறார் ஆனால் அவரால் பசுவை எழுப்ப முடியவில்லை.
அந்த வழியே வந்த காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் இதைக் காண்கிறார். மாட்டோடு இங்கு என்ன கொஞ்சிக் கொண்டு இருக்கிறாய். நகருங்கள் நான் அதை எழுப்புகிறேன் என்று பால்காரரை அதட்டி விட்டு அவர் மாட்டை எழுப்ப முயற்சிக்கிறார்.
ஆனால் அவரால் அதை அசைக்கக் கூட முடியவில்லை.இதை எல்லாம் கண்டு நகைத்தபடியே ஒரு பள்ளிச் சிறுவன் அங்கு வருகிறான். அவர்கள் செய்வதைச் சிறிது நேரம் நின்று வேடிக்கை பார்த்து சிரித்து விட்டு அங்கிருந்து நகர்கிறான்.
சிறிது தூரம் சென்று அங்கு கிடந்த புல்லை எல்லாம் அறுத்து அதை ஒரு கத்தையாகக் கட்டி பிறகு அதை மாட்டருகே கொண்டு வருகிறான்.
புல்லைப் பார்த்தவுடன் அந்த மாடு அதைச் சாப்பிடுவதற்காக எழுகிறது. சிறுவனோ, புல்லை மாட்டின் வாயருகே காண்பித்தபடி நடக்கிறான். மாடும் அவனோடு சேர்ந்து நடந்து சென்றது.
எந்தப் பிரச்சனைக்கும் மிக எளிமையான ஒரு தீர்வு நிச்சயம் உண்டு.
அந்தத் தீர்வை கண்டறிவதே புத்திசாலித்தனம்.

No comments:

Post a Comment