Friday 17 February 2023

விதைப்பது வீணாகக் கூடாது.

 விதைப்பது வீணாகக் கூடாது.

*விருப்பம் நிறைவேறாத போது கோபம் அதிகரிக்கிறது.*
*விருப்பம் நிறைவேறினால்
பேராசை அதிகரிக்கிறது.*
*கோபமும் பேராசையும்
நம் வாழ்வை அழிக்கும் ஆயுதங்கள்.*
*நோயை விட
அச்சமே அதிகம் கொல்லும். *
*உங்கள் வெற்றிகளை விதி எனும் கதவு மூடினால் நம்பிக்கை எனும் சாவி அந்தக் கதவைத் திறக்கும். நம்பிக்கை வையுங்கள்,
அதன் பலன் நிச்சயம் உண்டு.*
*உங்கள் எதிர்காலத்தின் சாவி தினமும் நீங்கள் செய்யும் செயல்களில் இருந்துதான் பிறக்கிறது.*
*எனவே உங்கள் எண்ணங்களும் செயல்களும் தூய்மையானதா என பரிசோதித்துக் கொள்ளுங்கள்.*
*தோல்வி உங்களை அடுக்கடுக்காக தாக்கினால், மனம் தளராமல் உங்கள் முயற்சியை அடுக்கடுக்காக எடுத்து வையுங்கள்.*
*ஒரு நாள் நீங்கள் எடுத்த முயற்சி கோபுரம் ஆகும்,
வெற்றி உங்கள் மகுடம் ஆகும்.*
*துருப்பிடித்துத் தேய்வதை விட
உழைத்துத் தேய்வது மேல்.*
*மகிழ்ச்சி என்பது மனதோடு
தொடர்புடையது மட்டும் அல்ல._*
*நம்மைச் சுற்றி இருக்கும்
மனிதர்களோடும் தொடர்புடையது.*
*உண்மைகள் ஊமையாகலாம் ஆனால் உறங்கிப் போகாது.*
*பொய்கள் நிலைத்து நிற்கும் ஆனால்
ஒருபோதும் வெற்றி அடையாது. *
*இன்றையக் காலகட்டத்தில் ஒருவரின் தவறுக்குத் தீர்வு என்பது
எதிராளியின் இன்னொரு தவறைச் சுட்டிக் காட்டித் திசை திருப்புவதே.*
*நன்றி மறந்தவர்களை எண்ணி நீங்கள் நிம்மதி இழக்காதீர்கள்*
*உங்கள் உதவியை மனிதர்கள் மறந்து போகலாம்.*
*ஆனால் இறைவன் மறந்து போவதில்லை.*
*நிலம் அறிந்து பயிர் செய்.
நபர் உணர்ந்து அறிவுரை சொல்.*
*விதைப்பது வீணாகக் கூடாது என்பதற்காக.*

No comments:

Post a Comment