Monday 13 February 2023

கதவு திறந்துவிட்டது.

 கதவு திறந்துவிட்டது.

*நேர்மையாக இருப்பவர்களுக்கு சோதனை வருவது தெரிந்ததே.
*அதற்காக
நேர்மையைக் கை விட்டு விடாதே.*
*அந்த நேர்மையே
உன்னைக் காப்பாற்றும்.*
*வாழ்வில் சின்னச் சின்ன விஷயத்திற்கு
எல்லாம் கோபப்படாதே.*
*சந்தோஷம் குறைவதற்கும் பிரிவினைக்கும்
இதுவே முதல் காரணம்.*
*உனக்கு உண்மையாக இருப்பவர்களிடம்
நீயும் உண்மையாய் இரு.*
*ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது.*
*ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவைத் தவற விடுகிறோம்.*
*விளித்திடு,
உனக்கான கதவு திறந்து விட்டது. *
*உள்ளம் இனிதானால்
உலகமே இனிதாகும்
எண்ணம் அழகானால்
எல்லாமே அழகாகும். *
*தியானம் செய்ய உங்களுக்கு நேரமே இல்லை எனும்போதுதான்,
நீங்கள் அவசியம்
தியானம் செய்ய வேண்டும்.*
சேருமிடம் பார்த்துச் சேர்
*கோயில் குளத்தில்
விழும்
மழைத் தீர்த்தம்.*
*குட்டையில்
விழும்
மழை அசுத்தம்.*
அதுதான் வாழ்க்கை *
*கடவுளுக்குப் பயந்து தப்பு
செய்யாமல் இருந்த காலம்
மாறிப் போய்.*
*கடவுளே பயப்படும் அளவுக்கு
தப்பு செய்யும் மனிதர்கள் பெருகி விட்டனர்.*
*தெரிந்து கொண்டேன்
என்பதை விட
தெளிந்து விட்டேன்
என்பது சிறந்த அனுபவம். *

No comments:

Post a Comment