Monday 27 February 2023

ஆழமான நம்பிக்கை, முயற்சி.

 ஆழமான நம்பிக்கை, முயற்சி.

ஒரு மண் சுவற்றில் ஆணி அறைந்தேன். கெட்டியான பிடிப்பு இல்லாததால். அந்த ஆணியில் ஒரு காலண்டர் ..கூட மாட்ட முடியவில்லை. அதே ஆணியை எடுத்து இன்னொரு இடத்தில் அதே சுவற்றில் அடித்தேன். அப்போதும் கெட்டியான பிடிப்பு இல்லாமல் மறுபடி அதே நிலைதான்.
மறுபடி மறுபடி முயற்சி செய்தும் என்னால் முடியாமலே போனது. விளைவு சுவரெல்லாம் பள்ளங்கள் ஆனது தான் மிச்சம்.
இந்த மண் சுவரை போலவே. உங்கள் மனதிலும் எதனிலும் நிலையான பற்றுக்கோடு இல்லாமல் இருந்தால் இப்படித்தான்.. எந்தச் செயலை எடுத்தாலும் இருக்கும்.அதனுடைய விளைவு…எதற்கும் லாயக்கு இல்லாதவன் என்கிற அவப் பெயர் தான்.
உங்களைப் பற்றிய பிறருடைய அபிமானம் எப்படி இருக்க வேண்டும் மிக கெட்டிக்காரன் என்பதா, ஆம் என்றால். கெட்டிக்காரன் ஆவதற்கு உங்களுக்கு எது தேவை.
எந்தச் செயலை எடுத்த போதும் ஆழமான நம்பிக்கை. அதிலே தீவிர முயற்சி. கடுமையான பிரயத்தனம். அந்த செயலில் அதீத விருப்பம். எப்படி முடிக்க வேண்டும், என்பதிலே ஒன்றுக்கு ஒரே ஒரு யோசனை மட்டும். போதும். (பல யோசனை கூடாது. மனம் தடுமாற அதுவும் காரணம்) போகவேண்டிய ஊருக்கான விபரம் மட்டும் தெரிந்தால் போதும். வழியில் உள்ள ஆயிரம் ஊர்களின் விபரங்கள் தேவை இல்லை.
அல்லது உங்கள் பார்வையில் சாதித்தவர்கள் எவரேனும் தென்பட்டால். (அப்பா, முதலாளி, குருநாதர் போன்றவர்கள்) அவர்கள் தன் செயல்களில் பின்பற்றுகிற லாவகங்களை. அப்படியே காப்பி அடியுங்கள்.
உங்களாலும் பலமுறை முயன்ற பின்னாவது ஒருமுறையேனும் சாதிக்க முடியும். முதல் சாதனை முதல் வெற்றி, அடுத்தடுத்த படிக்கட்டுகளாய் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும். நாளடைவில் தானாகவே மன தடுமாற்றம் மறைந்துவிடும்.

No comments:

Post a Comment