Wednesday 8 February 2023

மனம் என்னும் தீரம்.

 மனம் என்னும் தீரம்.

இந்த உலகம் என்பது இரட்டை தன்மை உடையது. இரவு பகல், இருட்டு ஒளி என்று எல்லாமே டபுள் ஆக்ட் தான்.
எல்லாவற்றிக்கும் மறுபக்கம் என்ற ஒன்று உண்டு. வாழ்க்கையும் அதே மாதிரி டபுள் ஆக்ட் தான்.
ஒன்று மனம் சார்ந்தது.
மற்றது உடல் சார்ந்தது.
நம் மனம் நமக்கு மட்டுமே சொந்தம். வேறு ஒருவருக்கு அதில் இடமில்லை.
ஆனால் நாம் வாழும் இந்த புற உலகு நம் உடல் சார்ந்தது. உடல் இல்லையேல் இங்கு ஏதும் இல்லை.
உடல் இருக்கும் வரை தான் மனைவி மக்கள். ஊரும் உறவும் உடல் உள்ள வரையே.உடல் போயாச்சுன்னா அடுத்த நிமிடமே அனைத்தும் காலி.
நமது மனம் சார்ந்த உலகில் கவலை, பயம்,வேதனை,மகிழ்ச்சி என்று பல உணர்வுகள் வந்து வந்து சென்று கொண்டே இருக்கும்.
நாம் ஒன்றுமே செய்யாமல் இருந்தால் அது தானாகவே சிறிது நேரத்தில் அகன்று விடும்.
மாறாக அந்த உணர்வுகளின் மீது நாம் நம் சிந்தனையை செலுத்தினால் அவை தொடர்ந்து நீடிக்கும்.
நாம் இன்பமான உணர்வுகள் நீடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். துன்ப மான உணர்வுகள் உடனே அகல வேண்டும் என்று ஆசைப் படுகிறோம்.
இந்த ஆசை தான் நம் மனதில் போராட்டத்தை உருவாக்கி நம் அமைதியைக் குலைக்கிறது.
நம் மனம் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் எந்த உணர்வுகளின் பின்னாலும் நம் சிந்தனையைச் செலுத்தக் கூடாது.
அதாவது சும்மா இருக்கனும். உண்மையில் நம் மனதினுள் நம்மால் சிந்தனை ஒன்றைத் தவிர வேறு எந்த விதச் செயல்களையும் செய்ய முடியாது.
சிந்தனை என்ற செயலை மட்டும் செய்யாமல் சும்மா இருந்தால் நம் மனம் நம்மை ஒன்றும் தொந்தரவு செய்யாது, அதுவும் சும்மா இருக்கும்.
நம் மன உலகில் நாம் இப்படித் தான் வாழ வேண்டும். மன உணர்வுகளை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு வெறுமனே இருந்தால் போதும்.
மனதினுள் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. அங்கு நம் சிந்தனையின் மூலம் ஏதேனும் செய்ய முயன்றால் குட்டையை குழப்புவதை போல மனம் மேலும் குழம்பித் தான் போகும்.
மனம் என்ற குட்டை தெளிய வேண்டும் என்றால் நாம் ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்தா போதும். அது தானாகவே தெளிந்து விடும்.
அதனால் மனம் என்ற உலகில் நாம் செய்வதற்கு ஏதும் இல்லை. சரணாகதி தத்துவத்தை கையாள்வதை தவிர அங்கு வேறு வழியில்லை என்பதை புரிந்து கொண்டால் போதும்.
மன உலகைப் பொறுத்தவரை நம் மனதில் என்ன நடந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அமைதியாக இருப்பதே தீரம்.
மனதில் எப்போதும் தீரமுடன் இருக்க வேண்டும்.
மனதைப் பற்றி மேலும் நாம் ஏதும் கூறப் போவதில்லை. இனி நம் உடல் சார்ந்த இந்த புற உலகில் எப்படி வாழப் போகிறோம் என்பது பற்றி மட்டுமே இனி நாம் பார்க்கப் போகிறோம்.
மனது என்பது சிந்தனையை சார்ந்தது. அது போல் உடல் என்பது செயல் சார்ந்தது.
மனதில் எதுவுமே செய்யக் கூடாது. ஆனால் இங்கு செயல் செய்ய வேண்டும். நேரெதிர் தான். இது மறு பக்கம் அல்லவா .
இந்த உலகில் காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை நாம் ஏதேனும் செய்ய வேண்டியது இருந்து கொண்டே இருக்கும்.
மனதில் ஏதும் செய்யக் கூடாது என்றால் எதாவது சிந்தனை செய்து கொண்டே இருப்போம்.
உலகில் ஏதாவது வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றால் எதுவுமே செய்ய மாட்டேன் என்று இருப்போம்.
செய்தக்க அல்ல செயக்கெடும். செய்தக்க செய்யாமை யானும் கெடும்.
அப்படி ன்னு வள்ளுவர் சொன்ன மாதிரி செய்ய கூடாது அப்படி ங்கற மன உலகில் எதையாவது செய்து மனசை கெடுத்துக் கொள்கிறோம்.
என்ன பண்றது இதை மாற்ற முயல்வோம்.
இனி ஒரு விதி செய்வோம். அதை எந்த நாளும் காப்போம்.

No comments:

Post a Comment