Thursday 23 February 2023

பயம் என்னும் பலவீனம்.

 பயம் என்னும் பலவீனம்.

மாடிப் பகுதியை வாடகைக்கு விடுபவர் எனக்கு சப்தம்னா அலர்ஜி. மாடியிலே தொம் தொம் என சப்தம் விழாமல் குடியிருக்க வேண்டும் என்று கூறியதை ஏற்று மாடிக்கு குடிபுகுந்தான் இளைஞன் ஒருவன்.
காலையில் சென்று இரவு வந்தான். திடுதிடுவென்று மாடிஏறினான். காலணிகளை கழற்றி வீசினான். அவை மூலையில் சென்று தொம் என விழுந்தது.
வீட்டுக்காரர் படப்படப்புடன் மேலே வந்தார். என்னப்பா ஒரு நாள் கூட ஆகவில்லை சென்னதை மறந்துவிட்டயே என்றார். ஒ... மன்னிச்சிருங்கள்.. பழக்கதோஷம்.. இனிமே ஜாக்கிரதையாக இருக்கின்றேன் எனக் கூற பெரியவர் கீழே சென்றார்.
மறுநாள். இரவு பத்து மணிக்கு வந்தவன் கிடுகிடுவென மாடிக்கு சென்றான். பழக்க தோஷத்தில் ஒரு காலணியை கழற்றி தூக்கி எறிந்தான். அது தொம்மென்று விழுந்தது. அப்போது அவனுக்கு வீட்டுக்காரர் சென்னது ஞாபகம் வந்தது.
ஆகா.. தப்பு செய்துவிட்டோமே.. இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நினைத்து இன்னொரு காலணி யை மெள்ளக் கழற்றினான். அதைக் கையில் எடுத்துக் கொண்டு அடிமேல் அடி வைத்து மூலைக்குச் சென்று சப்தமில்லாமல் கீழே வைத்தான். படுக்கையில் படுத்துக் கொண்டான்.
விடியற் காலம் 4மணிக்கு கதவு தட்டும் ஓசை கேட்டு கதவைத் திறக்க வீட்டுக்காரர் காதை பொத்திக் கொண்டு நடுக்கத்துடன் நிற்பதை பார்த்தான்.
''என்னப்பா..ஒரு தடவை தொப் என்ற சப்தம் கேட்டது. அந்த இன்னொரு காலணியையும் சீக்கிரம் போட்டு விடேன். அந்த சத்தம் வரலையேனு ராத்திரி பூர காதைப் பொத்திக்கிட்டு முழிச்சிக்கிட்டே இருக்கேன்'' என்றார்.
இதைப் போலத்தான் நம்மில் பலர் எதையோ ஒன்றிற்காக பயந்து அது மீண்டும் நடந்து விடுமோ என்ற நினைவில் பயத்தில் மனதை அலைய விட்டுக் கொண்டிருக்கின்றோம். வீணான கற்பனைகளால் குழப்பம் அடையாதீர்கள்.

No comments:

Post a Comment