Tuesday 28 May 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


















எஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் அவலம்... மாடியில் இருந்து குதித்து இன்றும் ஒரு மாணவர் தற்கொலை..
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நேற்று ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று திருவள்ளூர் மாவட்டம் பென்னேரியை சேர்ந்த அனுப்பிரியா என்ற மாணவி 9-வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டார். இவர் மருத்துவ துறையில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது மாணவியின் உடலை உறவினர்கள் இன்று வாங்கி சென்ற நிலையில் அனிரூத் என்ற மாணவர் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனிரூத் என்ற மாணவர், ஈ.சி.ஈ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த அவர் இன்று காலை, 2ஆவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அனிரூத் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலைநகர் போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த செய்தியை எந்த பத்திரிக்கையும் பெரிதாக வெளியிடாதது ஏன்?தினதந்தி பத்திரிக்கையில் கலலூரியின் பெயரை கூட வெளியிடாமல்,தனியார் கல்லூரியாம்.ஏன் கல்லூரியின் பெயரை வெளியிட என்ன தயக்கம்?அதை பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன?இதுதான் பத்திரிக்கை தர்மமா..?இதே தர்மம் மற்றவர்கள் விஷயத்தில் காப்பாற்றப்படாமல் தலைப்பு செய்தியாக அட்டை படத்துடன் போட்டு அவமானபடுத்தும் போது இந்த புத்தி இல்லாதது ஏன்?எந்த டிவி யாவது இதைப் பற்றி விவாதிக்க துணிவு உண்டா?எந்த அரசியல் கட்சி தலைவனும் இந்த 4-ம் ஆண்டு மருத்தும் பயின்ற மாணவிக்காக போராடதது ஏன்?மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கா போராடும் சுயநலவாதிகள்,இந்த நான்காம் ஆண்டு மருத்துவம் படித்த மாணவியின் தற்கொலை பெரிதாகபடாதது ஏன்?
கல்லூரி நடத்துபவன் கூட்டணிக் கட்சிகாரன், பணம் படைத்தவன், பத்திரிக்கை,டிவி வைத்துள்ளவன்.இந்த செய்தியை எப்படி வெளிபடுத்துவார்கள்?இனி தற்கொலைக்கு காரணம் குடும்ப பிரச்சனை அல்லது காதல் தோல்வி என போலீஸ் விசாரணையோடு முடிக்கப்படும்..

No comments:

Post a Comment