Thursday 23 May 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மோடியின் மிகப்பெரிய ராஜதந்திரம்-
இந்திய அரசியலில் மோடி மிகச்சிறந்த அறிவாளி
என்றே கூறலாம்.ஏனென்றால் தன்னுடைய எதிரியை போர்க் களத்திற்கு வர விடாமல் தன்
னுடைய படைக்கு கொண்டு வந்த புத்திசாலி.
எதிரிகளே இல்லாத நிலையில் இப்பொழுது
தேர்தலை மோடி சந்தித்து உள்ளார்.
இந்திய அரசியலி ல் இது வரை மிகப்பெரிய அளவில் எதிர்கட்சிகள்ஒன்று சேர்ந்து ஆளும் கட்சியை வீழ்த்தியதுஇரண்டே இரண்டு தேர்த ல்களில் மட்டுமே நடைபெற்றது.
.
1977 ல் மொரார்ஜி தேசாய் தலைமையில் எதிர்
கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்திரா காந்தியை வீழ்த்தினார்கள்.அதே மாதிரி 1989 ல் விபி சிங்
தலைமையில் எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து
ராஜீவ் காந்தியை வீழ்த்தினார்கள்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் மொரார்ஜி
தேசாய் இந்திரா காந்தியின் அமைச்சரவையில்
துணை பிரதமராக இருந்ததோடு நிதி அமைச்சரா கவும் இருந்தவர்.விபி சிங் ராஜீவ் அமைச்சரவை
யில் நிதி அமைச்சராக வும் ராணுவ அமைச்சராக
வும் இருந்தவர்.
ஆக காங்கிரசை தோற்கடிக்க நினைத்த எதிர்க்க ட்சிகள் தங்களுக்கு தலைமை ்தாங்க தேர்ந்தெ
டுத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் பிரதம
ருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்கள் தான்.
இவர்களுகளுக்கும் பிரதமருக்கும்.இடையே
ஏற்பட்ட ஈகோ பிரச்சனையே அவர்களை சொந்த
கட்சியை விட்டு வெளியேற வைத்து எதிர்கட்சி
களோடு கை கோர்க்க செய்து அவர்களையே
பிரதமராக வர வைத்தது.
அவர்களால் தான் அவர்களின் சொந்த கட்சியில்
குழப்பத்தை உருவாக்கி பலவீனப்படுத்த முடியும்.
இதனால் தான் 1977 ல் இந்திராவை வீழ்த்தி மொரார்ஜி பிரதமராக வர முடிந்தது. 1989 ல்
ராஜீவை வீழ்த்தி விபி சிங் பிரதமராக வர முடிந்த
து.
அப்படி ஒரு சூழ்நிலை இந்த 2019 லோக்சபா
தேர்தலில் உருவாகும் என்று அரசியல் ஆர்வலர்
களும் பிஜேபி எதிர்ப்பாளர்களும் எதிர்பார்த்து
இருந்தார்கள்.பிஜேபி கூட்டணியில் சுமார் 20
ஆண்டுகளாக இருந்தவர் நிதிஷ்குமார்.பிஜேபி
யின் அனைத்து தலைவர்களோடும் பிஜேபி யின் கூட்டணிகட்சி தலைவர்களோடும் மிக நெருங்கிய
நட்புறவு கொண்டவர் நிதிஷ்குமார்.
2014 லோக்சபா தேர்தலில் மோடியை பிரதமர்
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு மோடி யோ
டு இருந்த ஈகோ பிரச்சனையால் பீகாரில் தன்னை வெற்றி பெற வைத்து முதல்வராக்கிய
பிஜேயியை ஆட்சியில் இருந்து துரத்தி விட்டு
பிஜேபி கூட்டணியில் இருந்து வெளிவந்து
20 ஆண்டுகளாக எதிரியாக சண்டை போட்டு
க்கொண்டு இருந்த லாலு பிரசாத் யாதவுடன் கை
கோர்த்தவர்.
நிதிஷ்குமாருக்கும் மோடிக்கும் என்ன பிரச்ச னை? ஒன்றும் கிடையாது. ஆனால் அத்வானி
வாஜ்பாய் காலத்து அரசியல் வாதியான அவர்
மோடியோடு இணைந்து செயல்பட அவருடைய
ஈகோ தடுத்தது அவ்வளவு தான்.இதனால் தான்
பிஜேபி கூட்டணி யில் இருந்து வெளி வந்தார்.
2015 பீகார் சட்டமன்ற தேர்தலில் லாலு வோடு
கை கோர்த்து தன்னை ஆளாக்கி பீகார் முதல்வர்
பதவியில் அமர வைத்த பிஜேபியை தோற்கடித்
தார்.செத்த பாம்பாக பீகார் அரசியலில் இருந்த
லாலுவுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.
இந்த பீகார் எலெக்சன் முடிந்து லாலு நிதிஷ்கு மார் கூட்டணி வெற்றி பெற்று நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக வந்ததுடன் அனைத்து
ஊடகங்களும் 2019 லோக்சபாதேர்தலில் மோடி யை எதிர்த்து நிதிஷ்குமாரைபிரதம வேட்பாளரா க நிறுத்தி அவர் தலைமையில் அனைத்து எதிர்க ட்சிகளும் மோடியை எதிர் கொள்ளும் என்றே
கூறி வந்தன.
நிதிஷ்குமார் மட்டும் இந்த லோக்சபா தேர்தலில்
எதிர்கட்சி களின் சார்பாக ்மோடியை எதிர்த்து
நின்று இருந்தால் அனைத்து கட்சிகளும் ஈகோ வை வீட்டு விட்டு அனைத்து மாநிலங்களிலும் தொகுதி உடன் பாடு வைத்துக்கொண்டு பிஜேபி
யை எதிர் கொண்டு இருக்கும்.
ஏனென்றால் நிதிஷ்குமார் காங்கிரஸ்
கம்யூனிஸ்ட் கள் சரத்பவார் மாயாவதி முலாயம் சிங்யாதவ் சந்திரபாபு நாயுடு நவீன்.பட்நாயக் மம்தா பானர்ஜி சந்திரசேகர ராவ் ஸ்டாலின் பரூக் அப்துல்லா என்று அனைத்து எதிர்க்கட்சி தலை வர்களுடன் நெருங்கிய நட்பை வைத்துள்ளார்.
இதனால் 1977 ல் எதிர்கட்சிகள் இந்திராவை வீழ்த்த மொரார்ஜி தலைமையில் திரண்டதை
போல 1989 ல் ராஜீவை தோற்கடிக்க விபி சிங்
தலைமையில் திரண்டதை போல 2019ல் மோடி
யை எதிர்க்க நிதிஷ்குமார் தலைமையில் எதிர்
கட்சிகள் திரண்டு இருக்கும்.எல்லோரும் இதை
ஆவலோடு எதிர்பார்த்து இருந்தார்கள்.
இந்த நிலையில் லாலுவோடு கூட்டணி வைத்து
வெற்றி பெற்று முதல்வரான நிதிஷ்குமாருக்கு
துணை முதல்வராக இருந்த லாலுவின் இளைய
மகன் தேஜாஸ்வி யாதவும் அமைச்சராக இருந்த
தேஜ்பிரதாப் யாதவும் லாலு வீட்டு மாட்டு தொழு
வத்தில் கட்டப்பட்டு இருக்கும் மாடுகளுக்கு
அளித்த மரியாதையில் கால் பங்கை கூட அளி க்க வில்லை.
இதனால் அத்வானி வாஜ்பாய்க்கு ஈடாக அரசிய லில் மரியாதை யோடு இருந்த நிதிஷ்குமார் தன்
னுடைய அரசியல் அனுபவத்தில் பாதி வயது கூட
இல்லாத லாலு மகன்களோடு மல்லுக்கு நிற்க
விரும்பாமல் இதற்கு மோடி யே பெட்ட ர் என்று நினைத்து மீண்டும் பிஜேபி கூட்டணிக்கு வந்தார்.
இந்த நேரத்தில் மோடி ஈகோ பார்த்து நிதிஷை
வேண்டாம் என்று கூறி இருந்தால் இப்பொழுது
அரசியல் திசை மாறி இருக்கும். நிதிஷ்குமார் தலைமையில் எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து மோடியை எதிர்த்து நிற்கும்.போட்டியும் மிக கடுமை யாக இருக்கும் .ரிசல்ட்டும் வேறு மாதிரி
யாக இருந்து இருக்கும்.
இதனால் போர்க்களத்தில் எதிரியை சந்திப்பதை
விட யார் போர்க்களத்திற்கு வருவார் என்று முன்
பே கணித்து எதிரியை களத்தில் இருந்தே ஒரம்
கட்டுவதே அரசியலில் மிகச்சிறந்த ்ராஜதந்திரம்
என்று கூற வேண்டும். அந்த வகையில் மோடி
இந்திரா காந்தியை விட மிகச்சிறந்த ராஜ தந்திரி
என்றே கூற வேண்டும்.
நன்றி விஜயகுமார் அருணகிரி

No comments:

Post a Comment