Saturday 25 May 2019

இந்தியன்டா!... உலக கம்பெனிகளின் சிஈஓ- வாக உலகையே ஆட்டிவைக்கும் 7 இந்தியர்கள்...

இந்தியன்டா!... உலக கம்பெனிகளின் சிஈஓ- வாக உலகையே ஆட்டிவைக்கும் 7 இந்தியர்கள்...
உலகின் முன்னணி நிறுவனங்களில் சிஈஓ என்ற முதன்மை செயல் அலுவலர் பதவியில் இருந்து உலகையே கட்டுப்படுத்தக்கூடிய பதவிகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள் தான். அதில் முக்கியமானவர் சுந்தர் பிச்சை. சுந்தர் பிச்சையைத் தான் நம் எல்லோருக்கும் தெரியும். அதையும் தாண்டி இன்னும் சிலர் மிகப் பெரிய உலக நிறுவனங்களை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
சுந்தர் பிச்சை (Google)
சுந்தர் பிச்சையை தெரியாத ஆளே இருக்க முடியாது. கூகுளின் சிஈஓவாக சேர்ந்த சில நாட்களிலேயே தன்னுடைய பல திட்டங்களின் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர். கூகுள் கடவுளை ஆட்டிவைப்பவர் இவர் தான்.
சுந்தர் பிச்சை பிறந்து வளர்ந்தது சென்னையில் தான். கூகுளில் புராடக்ட் மேனேஜராக சேருவதற்கு முன் அவர் McKinsey & Co என்னும் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கூகுள் டூல் பார் உருவாக்கிய குழு மற்றும் கூகுள் குரோம் உருவாக்கக் குழுவில் இவர் பணி முக்கியமானது. அதன்பின்னர் தான் 2015 ஆம் ஆண்டில் கூகுளின் சிஈஓவாக பொறுப்பேற்றார்.
சாந்தணு நாராயண் (Adobe)
இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். முதலில் 1998 இல் அடோபில் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து பின் 2005 ஆம் ஆண்டு chief operating officer ஆக பதவி உயர்வு பெற்றார். அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே இந்நிறுனத்தில் சிஈஓவாகப் பொறுப்பேற்றார். இவரது தலைமையில் அந்நிறுவனம் சாஃப்ட்வேர் துறையில் பல மைல் கற்களை எட்டியது. கடந்த 2015- 17 இரண்டு ஆண்டுகளில் உலக அளவில் உள்ள சிறந்த சிஈஓக்களில் ஒருவராக நாராயண் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆண்டு 2019 இல் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கைகளால் பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார்.
எல்க்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கும் முதுகலையில் கணினி அறிவியலும் படித்தார்.
சத்யா நாதெல்லா (Microsoft)
நாதெல்லா பிறந்தது ஹைதராபாத்தில். இப்போது வாஷிங்டன்னில் வசித்து வருகிறார். 1992 ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சாதாரண பணியில் சேர்ந்து தன்னுடைய திறமையாலும் கடின உழைப்பாலும் 2014 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் சிஈஓவாக உயர்ந்திருக்கிறார். இவருடைய ஆலோசனைகளினால் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
அஜய் பங்கா (Master Card)
புனே அருகே உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் தான் அஜய் பங்கா. ஆரம்பத்தில் சிட்டி குரூா் ஆசியா பசிபிக் நிறுவனத்தில் சிஈஓவாக இருந்தார். அதோடு மட்டுமின்றி இந்திய நிறுவனமான Nestle மற்றும் பெப்சிகோ. நிறுவனத்திலும் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார். அதோடு பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது அவருடைய கட்டுப்பாட்டில் இந்தியா- அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தின் பேரில் சைபர் ரீடினஸ் இன்ஸ்டிடியூட் என்னும் டிரஸ்டையும் நிர்வகித்து வந்தார். அதோடு ஒபாமாவின் அதிபருக்கான ஆலோசனைக் குழுவில் முக்கிய இடம் பிடித்தார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் இவர். அதன்பின் தன்னுடைய முதுகலையை அகமதாபாத்தில் முடித்தார்.
ராஜீவ் சூரி (Nokia)
இப்போது வேண்டுமானால் ஏராளமான மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் மொபைல் என்றாலே நோக்கியா தான் என்கிற அளவுக்கு உலகம் முழுவதும் எங்கும் நிறைந்திருந்தது. இன்றளவும் கூடு நோக்கியா போனுக்கான மதிப்பு மக்கள் மனதில் மாறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த நிறுவனத்தின் சிஈஓவாக இருப்பவர் தான் ராஜீவ் சூரி.
இவர் மணிபால் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் முடித்தார். 2015 ஆண்டு மார்க்கோபோலா விருதையும் பின்லாந்து நாட்டின் சிறந்த பிசினஸ் லீடர் விருதை 2018 ஆம் ஆண்டும் பெற்றார்.
பிரான்சிஸ்கோ டிசோசா (Cognizant)
Cognizant நிறுவனத்தின் சிஈஓ மட்டுமல்ல, இவர் அந்நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரும் கூட. 2007 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் வருமானம் 2.1 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்ததை கடந்த 2018 ஆம் ஆண்டில் 16.1 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்திக் காட்டினார். தன்னுடைய பள்ளிப் பருவத்திற்குள்ளேயே ஒன்பது நாடுகளில் வாழ்ந்திருக்கிறார். இந்திய பாரம்பரியக் குடும்பம் என்றாலும் இவர் பிறந்தது கென்யாவில்.
சஞ்சய் மெஹ்ரோத்ரா (Micron Technology)
பிரபல ஹார்டு டிஸ்க் தயாரிப்பு நிறுவனத்தில் ஒன்றான சான்டிஸ்க் (SanDisk) நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவர். 2017 ஆம் ஆண்டு Micron Technology நிறுவனத்தின் சிஈஓ மற்றும் பிரசிடண்ட்டாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment