Friday 24 May 2019

துக்ளக் வாசகர் குழு பதிவு..

துக்ளக் வாசகர் குழு பதிவு..
தேர்தலில் வெற்றி , தோல்வி என்பது சகஜமே. ஆனால் தோல்வியை ஏற்றுக் கொள்வதில் தான் சிலருக்கு தயக்கம்.
வெற்றி பெற்றால் ஆனந்த கூத்தாடுபவர்கள் , தோல்வி அடைந்தால் அதற்கான காரணத்தை ஆராய்ந்து அந்த தவறு மீண்டும் நடக்காமல் பார்த்து கொள்வது தானே நல்லது. அதை செய்கிறோமா?
இங்கு சிலர் தமிழக மக்களை எவ்வளவு வசைபாட முடியுமோ அவ்வளவு பாடி தீர்த்து விட்டார்கள். தமிழக மக்கள் யார்? நீங்களும் நானும் தானே?
முகநூலில் இங்கு எழுதுபவர்கள் நேரடியாக எத்தனை மக்களை சந்தித்து பேசினீர்கள்? முகநூல் மட்டுமே உலகமல்ல. ஒரு ஓட்டு கூட வீணடிக்காமல் மொத்த ஓட்டும் விழுவது பாமர மக்களிடமிருந்து தான். அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் யாருடையது என்று தெரியுமா? அதற்கான முயற்சிகள் செய்யப்பட்டதா?
பிராமணர்கள் ஒட்டுமொத்த தமிழகத்தில் எத்தனை சதவீதம்? தென்சென்னையில் எத்தனை சதவீதம்? இவர்கள் தான் வெற்றி தோல்வியை முடிவு செய்வது என்றால் தேர்தலே வேண்டாமே. பிராமண சங்கமே யார் வர வேண்டும் என்று அறிவித்துவிடலாமே.
சிலர் தமிழகத்தில் இல்லாதது பெருமையாக நினைக்கிறார்கள் , தமிழக மக்களுக்கு புத்தியில்லை, அறிவில்லை,... இன்னும் என்னவெல்லாமோ சொல்லப்படுகிறது.
இப்படி சொல்வதற்கு முன் ஒன்றை யோசிக்க வேண்டும். எத்தனை பிரச்சினைகளுக்கு நாம் ஒற்றுமையாக போராடினோம்? ஒரு அமைப்பு நடத்தும் நிகழ்ச்சிக்கு மற்ற அமைப்பினர் செல்ல மாட்டார்கள், சம்பந்தப்பட்ட கட்சியும் ஆதரவளிக்காது. அதே கட்சி நடத்தும் நிகழ்ச்சிக்கு மற்ற அமைப்பினர் ஆதரவு கிடையாது. இந்த குழுவிலேயே எத்தனை போராட்ட நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எத்தனை பேர் கலந்து கொண்டனர்? நமக்குள் ஒற்றுமை கிடையாது. தனக்கு வேண்டியவர்களுக்கு ஒட்டளித்த மக்களை குறை சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை.
பொதுமக்கள் சிலர் தானாகவே வந்து பா.ஜ.க. ஆதரவு தந்தனர். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
மாரிதாஸ் அவர்கள் பல காணொலிகள் வெளியிட்டார். பா.ஜ.க. அதை பாமரனிடம் கொண்டு சேர்த்ததா? KT.ராகவனையும் , நாராயணன் திருப்பதியையும் எத்தனை பேருக்கு தெரியும்? நல்ல ஆளுமையுடைய , தொண்டர்களை ஊக்கப்படுத்தி காலத்திற்கு ஏற்ப ஒரளவு பணம் செலவு செய்யத் தயங்காத நல்ல தலைவர் இருந்தால் தான் கட்சி அடுத்த நிலைக்கு செல்வது பற்றி யோசிக்க முடியும்.
உண்மையில் தோல்வி என்பது பொன்னார் அவர்களுக்கு மட்டுமே. வருந்த வேண்டியது அந்த தொகுதி மக்களே. மற்றபடி மக்களை குறை சொல்வதை விடுத்து ஆக்கபூர்வமான வழியை தேடி சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வழியை நாடுதல் நலம்.
ஊரெல்லாம் கரண்ட் இருந்தும் நம் வீட்டில் மட்டும் கரண்டு இல்லாத நிலைமை.
*வீழ்வது கேவலமல்ல , வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம். உணர்ந்து செயல்படத் தொடங்கணும் *.
ஜெய்ஹிந்த்
பாரத் மாதா கீ ஜெய்

No comments:

Post a Comment