Monday 27 May 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தர்மம் செய்வதற்கு
தடையாக இருப்பது எது..?
நிறைய பேர் தர்மம் செய்யாமல்
இருப்பதற்கு காரணம் கருணை இல்லாததால் அல்ல.
மனதில் துணிவு இல்லாததால்.
இருப்பதை எல்லாம் கொடுத்து விட்டால், நாளைக்கு நமக்கு என்ன இருக்கும்? என்ற பயம். எதிர் காலம் குறித்த பயம்.. மக்களை தர்மம் செய்ய விடாமல் தடுக்கிறது.
ஒருத்தனுக்கு கொடுத்தால் பத்து பேர் வருவான். எல்லாருக்கும் நம்மால் கொடுக்க முடியுமா என்ற பயம்.
எனவே தான் ஒளவையார்
'அறம் செய்ய விரும்பு' என்றார்..
அறம் செய் என்று சொல்லி இருந்தால், வறுமையால் பிறருக்கு உதவமுடியாதார் நிலை என்னவாகும்? அதனால்தான் ஒளவையார், அறம் செய்ய விரும்பு என்றார். விருப்பமில்லாமல் செய்வதைவிட, செய்ய முடியவில்லை என்றாலும், செய்ய வேண்டும் என்று மனதார விரும்புவது மேன்மை..
ஆக அந்த பயம் போக வேண்டும்.
வள்ளலார் கூறுகிறார்...
'வாழைதகுபலா மாமுதற் பழத்தின்
தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்..'
பழத்தின் தோலை கூட மற்றவர்களுக்குத்
தர துணிய மாட்டேன் என்று...
ஆம்.. சாப்பாட்டில் ஆர்வம் அதிகம் ஆனால், கொடுக்கும் குணம் குறையும். எல்லாம் எனக்கே வேண்டும் என்று பேராசை வரும்.
எல்லோரிடமும் இரக்கம் இருக்கும்.
அன்பு இருக்கும். கருணை இருக்கும். ஆனால், ஆயிரம் ரூபாய் நன்கொடை தர மனம் வராது. அன்பு இல்லாமல் அல்ல. துணிவு இல்லாதாதால்.
பக்தி, இறை உணர்வு வர வேண்டும் என்றால் சாப்பாட்டின் மேல் உள்ள ஆர்வம் குறைய வேண்டும்.
உணவின் அளவை குறைத்துப் பாருங்கள்.
மனம் உறுதி பெறுவதை உணர்வீர்கள்.
உடல் உற்சாகம் அடைவதை உணர்வீர்கள்.
பசி என்றால் என்ன என்று அறிவீர்கள். மற்றவர்களின் பசியை உணர்வீர்கள். உதவும் எண்ணம் மேலோங்கும்.
கருணை பிறக்கும்.
அது உங்களை உயர் நிலைக்கு
கொண்டு செல்லும். செல்லட்டும்..
ஓம் நமசிவாய

No comments:

Post a Comment