Monday 27 May 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பீகார் மக்களுக்கு நன்றி..
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தலைவராக இருந்தவன் கன்னையா குமார்(32). அவன் கலந்துகொண்ட மாணவர் போராட்டத்தில் கன்னையா மீது தேசவிரோத வழக்குகள் பதிவாகி கைது செய்யப்பட்டான். தற்போது ஜாமீனில் இருக்கும் அவன் நாடு முழுவதிலும் பிரபலமாகி விட்டான். இதனால், மக்களவை தேர்தலில் போட்டியிட கன்னையாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ)பீகாரின் பேகுசராயில் போட்டியிட வாய்ப்பளித்தது.
நம் நாட்டில் உள்ள பிரிவினைவதிகள்,தேசதுரோகிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவனுக்காக பிரச்சாரம் செய்தனர்.
மத்திய பெங்களூரூ தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நின்ற நடிகர் பிரகாஷ்ராஜ் பேகுசராயில் தங்கி பிரச்சாரம் செய்தான். சிபிஐயின் தேசிய செயலாளர் டி.ராஜா, சமூக ஆர்வலர் என்று கூறிக்கொள்ளும் பிரிவினைவாதியான பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி, அவரது கணவரும் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரான சீதாராம் யெச்சூரி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசியின் பல இளம் அரசியல் தலைவர்கள். குஜராத்தின் தலித் சமூகத் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, காங்கிரஸில் இணைந்து விட்ட ஹர்திக் பட்டேல் ஆகியோரும் கன்னையாவிற்காக பேகுசராயில் பிரச்சாரம் செய்தனர். இவனை எதிர்த்து பாஜகவில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷோர் போட்டியிட்டார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியும் கன்னையாவிற்கு ஆதரவளித்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வீ பிரசாத் யாதவ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதனால், லாலு கட்சியின் சார்பில் தன்வீர் ஹசன் என்பவர் போட்டியிட்டார். இவரையும் சேர்த்து மும்முனைப் போட்டி நிகழ்ந்தாலும் கன்னையாவிற்குதான் வெற்றி வாய்ப்பு அதிகம் என தெரிவித்தனர்.பிஜேபி அமைச்சரும் அச்சத்துடன்தான் ஏனோ தானோ என்று நம்பிக்கை இன்றி பிரச்சாரம் செய்தார்..
ஆனால்,கன்னையா குமார் படுதோல்வியை தழுவினான்.கன்னையா குமார்2.7 லட்சம் வாக்குகள் பெற்றான். எதிராக போட்டியிட்ட பிஜேபி அமைச்சர் கிரிராஜ் சிங் 6.92 லட்சம் வாக்குகளை பெற்றார்.
நாட்டை துண்டாட நினைப்பவன் அத்தனை பேரும் அவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர்.ஆனால் பீகார் மக்களோ?தேச விரோதியை நாடாளுமன்றத்திற்குள் அனுப்பிவிடாமல் ஒன்றுபட்டு நின்றனர். இவன் தேர்வாகி சென்றிருந்தால்,இவனைப் போல் பல பிரிவினைவாதிகள் அடுத்து அடுத்து உருவாக இது தூண்டுதலாக அமைந்திருக்கும்.ஆதலால், இந்த தொகுதி மக்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
ஆனால் தமிழக வாக்காளர்களோ...?

No comments:

Post a Comment