Monday 27 May 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)














தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட அதிகாரம் கொண்ட செயற்குழுக்கூட்டம் டெல்லியில் கூடியது. இக்கூட்டத்தில் ராகுல்காந்தி பல்வேறு விஷயங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசி,3 மூத்த தலைவர்கள் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
அதில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்,ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட்,மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ஆகியோர் தங்களின் மகன்களுக்கு எம.பி.சீட் கேட்டு அதிகமான நெருக்கடி அளித்தார்கள்.கட்சியின் நலனைக்காட்டிலும் தங்களின் மகன்களின் நலன்மீது அதிக அக்கறை செலுத்தினார்கள் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜோதிர்தியா சிந்தியா பேசுகையில் மாநிலத் தலைவர்களை வழுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட போது, கோபப் பட்ட ராகுல் காந்தி,சிதம்பரத்தை பார்த்து" தன்மகனுக்கு சீட் கொடுக்காவிட்டால் கட்சியில் இருந்து விலகுவதாக மெரட்டல் விடுத்தார்" என கூறியதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தன் மகன் மீது உள்ள ஊழல்வழக்குகளில் இருந்து காப்பாற்ற,தன் மகன் எம்.பி.யாக இருப்பது அவசியம் என ப.சிதம்பரம் கருதியிருப்பாரோ?
தன் அப்பாவின் இந்த குணத்தை அறிந்ததால்தான், கார்த்திக் சில தினங்களுக்கு முன்பு,"தமிழர் என ஒரு இனம் உண்டு அவர்களுக்கு என்று ஒரு குணம் உண்டு"என கூறினாரோ?

No comments:

Post a Comment