Tuesday 21 May 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

_*தேர்தல் முடியட்டும் என்று காத்திருந்தோம். அதிரடி அறிவிப்பை வெளியிட்டது இந்திய ராணுவம்.*_
_*டெல்லி* :_
_நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து நேற்று மாலை பல்வேறு செய்தி நிறுவனங்கள் யார் வெற்றி பெறுவார் என்ற கருத்து கணிப்பினை வெளியிட்டனர்._
_அதில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமையும் என்றே அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறின. அந்த பரபரப்பு அடங்கும் முன்பு தற்போது இந்திய ராணுவத்தை சேர்ந்த முக்கிய அதிகாரி ராஜ்தீப்சிங் டெல்லியில் சந்தித்து, முக்கிய தகவல் ஒன்றிணை வெளியிட்டார்._
_நடந்து முடிந்த நாடாளுமன்ற பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் எங்களது, ஐக்கிய முற்போக்கு ஆட்சியிலும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது. நாங்கள் ஒன்றும் மோடியை போல தம்பட்டம் அடிக்கவில்லை, அதை வைத்து அரசியலும் செய்யவில்லை. நாட்டை பாதுகாப்பதில் பா.ஜ.க-வை விட 100 மடங்கு காங்கிரஸ் தகுதியுள்ள இயக்கம் என்றும் தெரிவித்திருந்தார்._
_மேலும் ராணுவ வீரர்களை வைத்து மோடி கீழ்த்தரமான அரசியல் செய்வதாகவும் கடுமையான வார்த்தைகளில் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பா.ஜ.க சார்பில் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் காங்கிரஸ் ஆட்சியில் எந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கும் நடத்தவில்லை என்று தெரிவித்ததுடன், இதுகுறித்து ஆர்.டி.ஐ மூலம் விளக்கமும் கேட்கப்பட்டது._
_இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த ராணுவ அதிகாரி ராஜ்தீப் சிங், இந்தியாவில் முதல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் நடத்தப்பட்டது என்றும், இதற்கு முன்னர் இந்திய ராணுவம் எந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கும் நடத்தவில்லை என்றும் தெரிவித்தார்._
_மேலும் இதை முன்பே அறிவித்தால் ராணுவம் அரசியலுக்கு பயன்படுத்தப்படுகிறது என்ற தேவையற்ற விவாதம் எழும். எனவே தேர்தல் முடிந்த சூழலில் தற்போது அறிவித்துள்ளதாக தெரிவித்தார்._
_தற்போது ராணுவத்தின் இத்தகைய அறிவிப்பு டெல்லியில் விவாத பொருளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பொய் தகவல்களை மக்கள் மத்தியில் கூறிவந்த ராகுல் காந்தி இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது._

No comments:

Post a Comment