Wednesday 22 May 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தமிழர் வரலாற்றை இளையோருக்கு எடுத்து செல்ல இலங்கை தமிர்கள் முயற்சி..சுவிட்சரலாந்தில் தமிழர் களறி ஆவணக்காப்பகம் திறப்பு.
உலகின் பல்வேறு இடங்களில்,வெவ்வெறு வடிவங்களில்,தமிழனத்திற்கெதிராகவும்,தமிழர் வரலாற்றினை காணாமல் போகச் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.உலகில் தமிழர் அடையாளங்கள்.வரலாற்றுச் சான்றுகள் வெளிவரும் போதெல்லாம் அவற்றை அமுக்கிவிடுவதில் அல்லது அழித்துவிடுவதில் பல் வேறு தரப்புகள் முனைப்பு காட்டுகின்றன.இவற்றையும் மீறி வெளி வருபவை மிக சொற்ப விஷயங்களே.
ஆதலால்,ஆவண காப்பகமும்,வரலாற்று நூலகமும் நம்மினத்தின் வரலாறு உரிய சான்றுகளுடன் பேணப்பட்டு,எதிர்கால சந்ததியினரின் கைகளில் சேர்க்கப்படாமல் விட்டு விட்டால்,கரைந்து போன இனங்களின் வரிசையில் பெருமைமிக்க நம் இனமும் சேர்ந்து கொள்ளும் என்பது சோகமான உண்மையே என கூறும் இலங்கை தமிழர்கள்,இதனை தவிர்க்க,19-05-2019 ஞாயிற்றுக் கிழமை சுவிட்சர்லாந்தில் உள்ள பேர்ன்நகரில் அமைந்த சைவநெறிக் கூடத்தில் தமிழர் களறி நவீன ஆவண காப்பகம் மற்றும் நூலகம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
சமயங்களை கடந்து பொது வழிபாடு செய்து மங்கல இசையுடன் தமிழ் நூல்களையும்,ஏடுகளையும் இளம் தமிழ்ச்சிறார்கள் பேரிகை முழங்க ஏந்தி வந்தனர்.
சமயங்களைக் கடந்துஇனமான உணர்வுடன் நடைப்பெற்ற இன்நிகழ்வில் உலக பொதுதுறையில் இருந்து கடவுள் வாழ்த்து ஒதப்பெற்று பொது வழிபாடு நடைபெற்றது.
காலை 10.00 மணிக்கு ஐரோப்பாத்திடலில் சுவிர்ச்சர்லாந்த் நாட்டுக்கொடி,முவ்வேந்தர் கொடிகள்,நந்திக்கொடி, சைவநெறிக்கூட்டத்தின் கொடி,இவைகள் இசை வாத்தியங்கள் முழங்க ஏற்றப்பட்டன.
உலக தமிழ்இன தலைவர் என்றவரும்,தமிழின இயக்கம்,தமிழ் போராளி,நாம் தமிழர் இன்னும் என்ன என்ன இயங்கங்களோ தமிழகத்தில் வைத்துக் கொண்டு தமிழ் மொழியையும், தமிழினத்தையும் காப்பதற்காக அவதாரமே எடுத்து வந்தது போல் பேசிய,பேசும் யாரும் இப்படி செய்ததுண்டா?செய்ய சிந்தித்ததுதான் உண்டா? தமிழை வைத்து பிழைக்கும் தமிழக அரசியல்வாதிகள், கவிஞர்கள் வெட்கப்பட வேண்டும்,இலங்கை தமிழர்களை பார்த்து..



No comments:

Post a Comment