Saturday 27 April 2019

ஒரு சிற்பி தான் கண்டதையும், தனது கற்பனையையும் சிற்பமாக செதுக்குகிறான்..

ஒரு சிற்பி தான் கண்டதையும், தனது கற்பனையையும் சிற்பமாக செதுக்குகிறான்..
தான் செதுக்கும் சிற்பங்கள் உயிரோட்டமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக பல நாட்களை அதற்காகவே செலவிடுகிறான். கல்லையே கலைவண்ணமாக்கி அதை உயிரோவியமாக மாற்றிவிடுகிறான்.
அத்தகைய சிற்ப கலையில் நம் முன்னோர் மிகச்சிறந்து விளங்கினர். கோவில்களில் பொக்கிஷங்களாக காட்சி தரும் சிற்பங்கள் இன்றைக்கும் தமிழனின் கலைத்திறனை பறைசாற்றிக்கொண்டு இருக்கின்றன.
தமிழகத்தில் சிற்பங்கள் இருக்கும் கோவில்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்களை கண்டு வியப்படைகிறார்கள். ஒவ்வொரு சிற்பத்துக்கும் பின்னணியில் இருக்கும் கதைகளை அவர்களுக்கு வழிகாட்டிகள் விளக்கி கூறுகிறார்கள். அந்த சிற்பங்களை வெளிநாட்டினர் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்துகிறார்கள். ஆனால், சொந்த மண்ணில் இருப்பதாலோ என்னவோ நம்மில் பலருக்கும் அதன் மகிமை தெரிவதில்லை. நவீன காலத்தில் கோவிலுக்கு செல்வோர் ஏனோ சிற்பங்களை ரசிக்க மறக்கிறார்கள். ரசிப்பதற்கு மாறாக, கலைநயமிக்க கற்சிலைகளில் காதல் ஜோடிகளோ, வேறு சிலரோ கண்டதை கிறுக்கி வைத்து, சிற்பியின் கலையை கொலை செய்வது தீராத வேதனையை தருகிறது.
சிற்பங்களை ரசிக்க பழகினால் பழங்கால நாகரிகம், பண்பாடு, வாழ்வியல் முறைகள் நம் கண்முன் நிழலாடும் என்பதில் சந்தேகமில்லை. சிற்பங்களில் நம் முன்னோர் இன்னும் உயிர்ப்போடு வாழ்கிறார்கள். மனித நாகரிகம் மற்றும் அதன் வளர்ச்சி நிலைகளையும் வெளிப்படுத்தும் சான்றுகளில் சிற்பகலைக்கு முக்கிய பங்கு உண்டு.
ஆனால், பல அரிய வகை சிற்பங்கள் படை எடுப்பால் அழிந்து போய்விட்டன. எஞ்சி இருப்பவற்றை காப்பாற்ற சிற்பங்களின் மகிமையை நாம் உணர்வது அவசியம்.
நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கை சிற்பமாக பல ஊர் கோவில்களில்..
நன்றி ராஜப்பா தஞ்சை



No comments:

Post a Comment