Monday 29 April 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உங்களுக்குத் தெரியுமா?
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
🍹 வீட்டிற்கு விருந்தினர் வந்ததும், சொம்பு நிறைய தண்ணீர் கொடுக்கும் வழக்கம் நம் முன்னோரிடம் உண்டு.
அது ஏன் என்ற ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?
🍹 தண்ணீர் மனிதர்களின் மனநிலையை மாற்றும் அற்புதமான சக்தி கொண்டது. முதலில் பயண களைப்பை போக்கிவிடும்.
இரண்டாவதாக தண்ணீர் அருந்துபவரின் மனநிலையை சாந்தப்படுத்தும். கோபதாபத்துடனோ, வெறுப்புணர்ச்சியுடனோ வருபவர்கள் தண்ணீர் அருந்தினால் சாந்தமாகிப் போவார்கள். பதற்றத்துடன் வருபவர்கள் மனநிலையில் தளர்வு கண்டு இயல்பு நிலை யை அடைவார்கள்.
🍹 யாராவது சண்டைக்கு வந்தால் கூட 'மொதல்ல தண்ணி குடிப்பா, அப்புறம் எல்லாத்தையும் பேசிக்கலாம்" என்று அக்கம் பக்கம் இருப்ப வர் கள் சமாதானம் செய்வார் கள். தண்ணீர் குடிப்பதால் சண்டையிடும் நோக்கத்துடன் வந்தாலும் அவர்களின் ஆத்திரம் வெகுவாய் குறைந்து விடும் என்பதே இதற்கு காரணம்.
🍹 இதற்காகவே விருந்தினர் களுக்கு தண்ணீர் கொடுக்கும் பழக்கம் உருவானது.விருந்தின ரின் மனநிலை எதுவாக இருந்தா லும், அது கேடுமிக்க தாக இருந்தாலும் தமது குடும்பத்தை தாக்காமல் காத்துவிடக்கூடியது. இந்தத் தண்ணீர் கொடுக்கும் வழக்கம் குறைந்து வருகிறது. ஓடிப்போய் ஒரு குளிர்பானம் கொடுப்பது கௌரவமாக கருதப் படுவது கசப்பான உண்மை.
நடப்பு சிந்தனை...!!
🌷 சில இடங்களில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது...
🌷 உங்களை நேசிக்கும் இடங்க ளில் உண்மை அன்புடன் இருங்கள்...
🌷 உங்களை போற்றும் இடங்க ளில் கவனமாக இருங்கள்...
🌷 உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்...
🌷 உங்களை தவிர்க்கும் இடங்க ளில் தலை காட்டாமல் இருங்கள்...
🌷 உங்களை சலனப்படுத்தும் இடங்களில் கண்ணியத்துடன் இருங்கள்...
🌷 உங்களை முதுகில் குத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்...
🌷 உங்களை வாட்டும் ஏழ்மை நிலையிலும் நேர்மையாய் இருங்கள்...
🌷 உங்களை தூற்றுவோரும் வாழ்த்தும் படி வாழ்க்கையை சிறப்புற வாழுங்கள்...

No comments:

Post a Comment