Wednesday 17 April 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

1. நீங்கள் யாருக்காவது தொலைபேசியில் தொடர்பு கொள்ளுகையில், அவர்கள் உங்களது அழைப்பை ஏற்காமல் போனால், இரண்டு முறைக்கு மேல் முயற்சிக்க வேண்டாம். உங்கள் அழைப்பை ஏற்பதை விட முக்கியமான பணிகளில் ஈடுபட்டு இருக்கலாம். அவரே பின்னர் உங்களுக்கு அழைப்பை எடுப்பார்...
2. பணமோ அல்லது பொருளோ கடனாகப் பெற்றால், அதை கொடுத்தவர்கள் கேட்பதற்கு முன் திருப்பிச் செலுத்துங்கள். இதுதான் உங்கள் நேர்மை மற்றும் தனித்தன்மையை காட்டும்.
3. உங்களுக்கு விருந்தளிக்க யாரேனும் உணவகம் அழைத்துச் சென்றால் விலையுயர்ந்த உணவுகளை தேர்வு செய்யதீர்கள். அதற்கு பதிலாக உணவு தேர்வு செய்வதை அவரிடமே விட்டு விடுங்கள்.
4. உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகிவில்லையா? உங்களுக்கு இன்னும் குழந்தை பிறக்க வில்லையா? நீங்கள் இன்னும் சொந்தமாக வீடு வாங்க வில்லையா? இது போன்ற கேள்விகளை யாரிடமும் கேட்டு காயப்படுத்தாதீர்கள்.
5. நீங்கள் எங்கேனும் கதவைத் திறந்து செல்லுகையில், பின்னால் யாரேனும் வந்தால் அவர்களுக்கும் வழி விட்டு பிறகு கதவை அடையுங்கள்.
6. உங்களது நண்பருடன் வாகனங்களில் (car, bus) பயணம் செய்கையில் பயணக் கட்டணத்தை அவரே செலுத்தி விட்டால், அடுத்தமுறை ஞாபகம் வைத்து நீங்கள் செலுத்துங்கள்.
7. மற்றவரது கருத்துக்களுக்கும் மரியாதை கொடுங்கள். மற்றவர்கள் பேசும்போது குறுக்கிடாதீர்கள். பேசிமுடிய பேசுங்கள்...
பல பேருடன் உணவு சாப்பிடுகையில் சத்தம் வருமாறு சாப்பிடாமல்.. வாயை மூடியவாறு மென்று சாப்பிடுங்கள்...

No comments:

Post a Comment