Wednesday 17 April 2019

29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் என எல்லாவற்றையும் அடங்கிய மிகப்பெரிய ஜனநாயக நாடு தான் இந்தியா!

















29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் என எல்லாவற்றையும் அடங்கிய மிகப்பெரிய
ஜனநாயக நாடு தான் இந்தியா!
தமிழக அரசியலையோ, அல்லது
தமிழக பிரச்சனைகளையோ மட்டும் 
மையமாக வைத்துக்கொண்டு
ஒரு தேசத்தின் மத்திய அரசின் நிர்வாகத்தை
மதிப்பிடுவதென்பது அறியாமையை
தவிர வேறில்லை!
நமது நாட்டில் மூன்றுவேளை
மூக்கு பிடிக்க உண்பவனும் இருக்கிறான்,
அரை வயிறு கால் வயிறு சாப்பிட்டு
அடுத்த வேளைக்கு என்ன செய்வது என்று
தெரியாமல் வாழ்பவனும்
இதே நாட்டில் தான் இருக்கிறான்,
அது போலத்தான் ஒவ்வொரு மாநிலங்களும்
வெவ்வேறு வளர்ச்சியில் இருக்கின்றன,
நன்கு முன்னேறிய பஞ்சாப், ஹரியானா
குஜராத் போன்ற மாநிலங்களும்
இந்தியாவில் தான் இருக்கின்றன,
ஒரிசா, பீகார் போன்ற மிகவும்
பின்தங்கிய மாநிலங்களும்
இந்தியாவில் தான் இருக்கின்றன,
தென்னிந்திய மாநிலங்களை பொறுத்தவரை
நான்கு மாநிலங்களுமே ஓரளவு
நன்கு வளர்ந்த மாநிலங்கள்,
அதனால் முன்னேறாத மாநிலங்களாக
இருக்கின்ற, வறுமையில் இருக்கின்ற
மாநிலங்களில் தான் ஒரு சரியான
மத்திய அரசு கவனம் செலுத்தவேண்டும்,
அதைத்தான் பாஜக அரசு செய்துகொண்டு
இருக்கிறது, எல்லாவற்றுக்கும்
ஒரு நாட்டின் பிரதமர் attendance
போடவேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாது.
இதைவிட முக்கியமானது உலக அளவிலான
இந்தியாவின் அங்கீகாரமும்,
இந்தியாவிற்கான முக்கியத்துவமும்
என்னவாகி இருக்கிறது என்பதை
பார்க்கவேண்டும்,
கச்சா எண்ணெய்யை நமது
இந்திய ரூபாயிலேயே வாங்கிக்கொள்ள
முடிந்திருக்கிறது,
பாகிஸ்தானுக்குள் நுழைந்து அடித்தாலும்
அக்கம்பக்கத்து நாடுகளை வாயை
பொத்திக்கொண்டு வேடிக்கை மட்டுமே
பார்க்க வைத்திருக்கிறது,
காஷ்மீர் தீவிரவாதத்தை கட்டுக்குள்
வைத்திருக்கிறது,
இத்தனை வருடங்களாக
பொதுமக்களுக்குள் நுழைந்து
குண்டுவைத்து மக்களை கொன்ற
தீவிரவாத கும்பலை நுழைய விடாமல்
தடுத்திருக்கிறது,
போலி பெயர்களில் இந்தியாவுக்குள்
இயங்கிக்கொண்டு வரி கட்டாமல்
ஏமாற்றி வந்த ஆயிரக்கணக்கான
கம்பெனிகளை இழுத்து மூடியிருக்கிறது,
ஒரு நாட்டின் பெருமளவிலான வர்த்தகம்
கருப்பு பணத்தில் மட்டுமே
இயங்கிக்கொண்டிருந்ததை
ஓரளவு தடுக்க முடிந்திருக்கிறது,
70 ஆண்டு காவிரி பிரச்சனைக்கு
ஒரு ஆணயம் அமைக்க முடிந்திருக்கிறது,
பெருமைமிகு இந்திய அடையாளங்களை
புதுப்பிக்க முடிந்திருக்கிறது,
இவையெல்லாவற்றையும் சேர்த்தால் கூட
மத்திய அரசு மேற்கொண்டு இருக்கும்
நல்ல விஷயங்களில்
வெறும் 30 சதவீதம் தான்,
மீதி 70 சதவீத திட்டங்களை
நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால்
கொஞ்சம் நடுநிலை மனதோடு
அவற்றை அணுகினால் தான்
தெரிந்துகொள்ள முடியும்,
பாஐக வின் திட்டங்கள் எல்லாமே
நீண்டகால நன்மை பயக்கும்
திட்டங்களாக இருப்பது பெரும்பாலான
மக்களுக்கு தெரியாது,
ஐந்து வருடம் ஆட்சியை பிடிக்க
ஓட்டுக்காக என்னென்ன இலவசங்களை,
என்னென்ன சலுகைளை,
என்னென்ன தள்ளுபடிகளை
தரலாம் என்று ஒரு போதும்
யோசிக்காததே பாஜகவின் தனித்தன்மை!
ஒருபோதும் சிறுபான்மையினர்
பாஜகவின் எதிரிகள் இல்லை,
தீவிரவாதத்தையும்,
கட்டாய மதமாற்றத்தையும் தான்
பாஜக எதிர்கிறதே ஒழிய
கிருத்துவர்களையோ,
இஸ்லாமியர்களையோ அல்ல.
அரசியல் லாபத்திற்காகவும்
மதரீதியாகவும்,
பாஜகவை வீழ்த்தவேண்டும் என்றும்
நினைத்து மதச்சாயம் பூசிக்கொண்டிருந்த
பிறமதத்தினரை சேர்ந்த பல கட்சிகளும்
இயக்கங்களும், அமைப்புகளும் கூட
உண்மையுணர்ந்து பாஜகவோடு
சேர்ந்திருக்கிறார்கள்,
மோடியின் பல திட்டங்கள்
வெற்றி பெற்றிருக்கிறது,
பல திட்டங்கள் பாதி வெற்றியும்
பாதி தோல்வியும் அடைந்திருக்கிறது,
பணமதிப்பிழப்பு போன்ற திட்டங்கள் கூட
செயல்படுத்தலில் உள்ள
குறைகளினால் தான் பாதி தோல்வி
பாதி வெற்றி அடைந்ததே ஒழிய,
மோடியின் நோக்கமும் எண்ணமும்
உயர்வாகவே இருந்தது,
எல்லாவற்றுக்கும் மேலாக
மோடியை விட ஒரு better ஆன
பிரதமர் வேட்பாளர் கிடைத்தால்
நானும் கூட அவருக்கு ஓட்டு போட
தயாராக இருக்கிறேன்,
ஆனால் பலவீனமான ராகுல் காந்தியை
எதிரில் நிற்கவைத்து அவருக்கு
ஓட்டு போடுங்கள் என்று கேட்டால்
நான் என்னதான் செய்யமுடியும்!!
So, Am sorry!
என்னோட ஓட்டு மோடிக்குதான்!
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
நீங்கள் இந்தியாவை,
இந்தியாவின் முன்னேற்றத்தை,
இந்தியாவின் பெருமைமிகு
அடையாளத்தை நேசிப்பவராக
இருந்தால், நீங்களும் தவறாமல்
மோடிக்கு ஓட்டு போடுங்கள்!!
பதிவாளர் திரு—#அஷோக்குமார். அவர்கள்.

No comments:

Post a Comment