Monday 15 April 2019

ஏன் மீண்டும் வேண்டும் மோடி?

ஏன் மீண்டும் வேண்டும் மோடி?
குஜராத் மாநிலத்தில், 18 ஆண்டுகளாக வசிக்கும் நான், தற்போது ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு, வேளாண்மை நிறுவனத்தின் திட்டங்களில் பணியாற்றி வருகிறேன். கர்நாடகா, மகாராஷ்டிரா கடலோர பாதுகாப்பு மற்றும் மணல்மேடுகள் மேம்பாட்டு திட்டம், இந்தியா, வடகொரியா மியான்மர், வங்கதேசம், தாய்லாந்து, இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் ஒருங்கிணைந்த காடுகள், மீன் வளம், விவசாயம், வேளாண் காடு வளர்ப்பு, மணல் மேடுகள், உணவு பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், கடலோர சூழலியல் பாதுகாப்பு புனரியக்கம், பேரிடர் மேலாண்மை போன்ற பலதரப்பட்ட இயற்கை வள மேம்பாட்டு பிரிவுகளில், ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை வல்லுன ராக பணிபுரிந்து வருகிறேன்.மோடி குஜராத்தின் முதல்வராகும் முன்பிருந்தே, நான் வதோதராவில் வசித்து வருகிறேன்.
'குஜராத் எனர்ஜி கமிஷன்' என்ற அரசாங்க நிறுவனத்திலும் பணிபுரிந்ததால், அவருக்கு பிற்பாடு மாநிலத்தில் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்களும், வளர்ச்சியும் எனக்குநன்றாக தெரியும். பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் குஜராத். படித்த திறமைசாலிகளுக்கும், பெண்களுக்கும் தகுந்த மரியாதையும் பாதுகாப்பும் அதிகம் கிடைக்கும் இடம்.மோடி, பரம்பரை வழி வராத, தனித்தலைமை, தகுதியின் பொருட்டு தலைவராக கண்டு எடுக்கப்பட்டவர். மோடி, இந்தி யாவை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்ல தேவையான தெளிவான பார்வையும் நெடுங்காலப் பயனளிக்கும் திட்டங்களையும் கொண்டவர்.
எடுத்த திட்டத்தை குறித்த காலத்துக்கு முன்பே கச்சிதமாக, வெற்றியுடையதாக முடிக்கும் திறன், அவரிடம் எப்போதும் வெளிப்பட்டிருக்கிறது.அது, மாநிலத்தில் முதல்வராக இருக்கும்போதும் சரி, இப்போது தேசத்தின் பிரதமராக இருக்கும்போதும் சரி; எடுத்த காரியத்தை செவ்வனே செய்து முடிப்பவர் மோடி.எப்போதும் இந்தி யாவின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து நோக்கில் ஊக்கமளிக்கின்ற, நேர்மையான, கடின உழைப்பாளி. அவருடைய தனித்திறம் மற்றும் செயலாக்கத்திறம், பெரும்பான்மை மக்களை அவர் மீது நம்பிக்கை கொள்ள செய்துள்ளது.1.பிற நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துதல்2.முதலீடுகளை கவர்தல்3.ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இந்தியாவின் நிரந்தர பங்களிப்புக்காக சபை உறுப்பினரின் ஆதரவை நாடுதல்போன்ற மூன்று முக்கிய குறிக்கோள்களுடன் பற்பல நாடுகளுக்கும், துாதரகங்களுக்கும் அயராமல் விஜயம் செய்தார். அவற்றில், குறித்த வெற்றிகளையும் கண்டார். எல்லா குடிமக்களுக்கும் நியாயமான கவுரவம் அளிக்கும் பொருட்டு தனது ஆட்சியில் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே சந்தை, ஒரே வரி போன்ற பல விஷயங்களை முன்னெடுத்துள்ளார்.
பல பழமையான செயலுக்குதவாத சட்டங்களை களைந்துள்ளார். தன் ஆட்சிக்காலத்தில் அவர் பல சந்தர்ப்பங்களில் அசாதாரணமான முடிவெடுக்கும் தனித்திறமையையும், செயல்படுத்தும் விரைவான செயல்திறனையும் நிரூபித்துள்ளார். இத்திறமைகள் மற்ற எந்த அரசியல் தலைவர்களிடமும் தற்போது காண இயலாதது.இளைஞர்களின் திறமைகளையும், தொழில்நுட்ப அறிவியலையும், மேம்பட்ட உட்கட்டமைப்புகளையும், அடிப்படை வசதிகள் பெருக்கத்தையும், இயற்கை வளங்களின் பாதுகாப்பு, சமூகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டையும் முன்னிறுத்தி, தேசத்தை ஊழலற்ற முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்கிறார்.மோடியே, செயலுாக்கம் உடைய ஆட்சியின் தனித்துவ உதாரணம் ஆவார். அவருடைய செயல்பாடுகள், சில நேரங்களில் பலருக்கு வலித்தாலும், நொதித்த புண்ணுக்கு மருந்திடும் நேரம் போன்றதே அந்த வலிகளும்; 65 ஆண்டுகள் அழுகிய புண்ணுக்கு மருந்திட்டு ஆற்றுவது,இன்றியமையாதது. வலிகளை பொறுப்போம்; நோயற்ற தேசம் செய்வோம்; தேசப்பற்றுடன் காப்போம்; என்றென்றும். இந்த தேசம் இளமையாய், என்றென்றும் ஜொலிக்க, மீண்டும் வேண்டும் மோடி.-
முனைவர் தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லிoswinstanley@gmail.comகட்டுரையாளர், ஒருங்கிணைந்த கடல்சார் சூழலியல் மேலாண்மை வல்லுனர்.
நன்றி தின மலர்.

No comments:

Post a Comment