Monday 29 April 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இனி எதற்கும் பயந்து ஓட வேண்டியதில்லை.................
[4/27, 6:33 PM] Manithatheni Chockalingam: #எச்சை_போராளீஸ்
பிய்ந்த காலணியோடு ஓடினார் கோமதிமாரிமுத்து
அப்புடின்னு மீடியாவுல போடுறான்
எம்மூட்டு பிள்ளைக்கு ஷூ வாங்கி கொடுக்க வக்கில்ல இதுக்கு பேரு டிஜிட்டல் இந்தியாவா?ன்னு ஒரு குரூப் சோசியல் மீடியாவுல கம்பு சுத்துது
உண்மை என்னன்னு தேடுனா..
பல சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்றதால்
ஸ்போட்ஸ் கோட்டாவில்
வருமானவரி அலுவலகத்தில் வேலை கொடுத்துள்ளது மத்திய அரசு.
பெங்களூரு அரசு குடியிருப்புல வீடும் குடுத்துருக்காங்களாம்.
வாரம் 1 நாள்தான் வேலை ,5 நாள் பெங்களூரு தடகள அகாடமியில் பயிற்சி.
இதெல்லாம் மறைச்சி
தமிழச்சிடா..புறக்கணிக்கிறாண்டா..
தினமலர் சின்னதா செய்தி போட்டுட்டான்டா..
அப்புடின்னு பிரிவினை விஷ(ம)த்தை விதைக்கிறானுகளே என்னடான்னு பார்த்தால்..
பிரஸ்மீட்டுல
கனிமொழிக்கு நெருக்கமான
பாதிரி ஜெகத் கஸ்பர் உட்கார்ந்திருக்காரு
அதனாலதான்
கனிமொழி பாராட்டுனாக..
ஸ்டாலின் பாராட்டுனாக ன்னு அந்தப் பொண்ணு கோமதி (சொல்லிக் குடுத்ததை) சொல்லுது.
கொசுரு :-
காலணிகளை அவர் அவர் பாத வடிவமைப்பு மற்றும் உந்தி தள்ளும் தன்மையோடு வலது இடது கால் கலர் வித்தியாசத்தில் தயாரகிறது உலக பணக்கார புட்பால் ஆட்டகாரர்கள் பலர் வெவ்வேறு நிறத்தை தான் பயன்படுத்துகிறர்
ஆதலால்..உணர்ச்சி வசத்தை அடக்கவும்..😂
[4/27, 6:33 PM] Manithatheni Chockalingam: கோமதி மேல் உள்ள உங்களுடைய அக்கறை அன்பு புரிகிறது. அதே வேலையில் சில உண்மைகளையும் அறியுங்கள். NIKE எனும் காலணி தயாரிப்பு நிறுவனம் ஓட்டப்பந்தயத்திறகாக "matumbos" எனும் வகை காலணிகளை தயாரித்து வருகிறது. அதில் "Limited edition" வகை matumbos இரு வேறு நிறங்களில் தயாரித்து அளிக்கிறது. கோமதி அணிந்ததும் அதே வகை காலணிகள் தான். அவர் பயிற்சி நேரங்களில் கிழிந்த நிலையில் இருந்த காலணிகளை பயன்படுத்திவந்ததும் உண்மையே. பன்னாட்டு போட்டிகளில் பங்கு பெற வேண்டுமானால் பல விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், இது அறிவார்ந்த சமூகம் அறியும். ஆகவே வீண் வதந்திகளை பரப்பாதீர்கள். Matumbos வகை காலணிகள்,
கோமதி அவர்கள் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். வேலை வாய்ப்பு முன் தான் பட்ட கடினமான சூழ்நிலையை விவரித்தார். தவறான செய்திகளை தராதீர்கள். அவருடைய சாதனையை கொச்சை படுத்தாதீர்கள்.
[4/27, 6:33 PM] Manithatheni Chockalingam: நன்றி : மானசீகன்
கோமதிகளுக்கு ஓடுவதோ , தங்கம் வாங்குவதோ பிரச்சினை இல்லை. முதல் நாள் மிஞ்சிப் போன பழைய சோற்றை மோர் கலந்து வெங்காயத்தைக் கடித்துக் கொண்டே மடமடவென குடிப்பதைப் போல் அத்தனை சுலமானது அது . அவர்களுக்கான ஒரே ஒரு பிரச்சினை , வாய்ப்பு கிடைப்பது மட்டும்தான் . அது மட்டும் கிடைத்து விட்டால் தங்கத்தையும் , வெள்ளியையும் தட்டிப் பறித்து வந்து, நாம் தப்பாகப் பாடிக் கொண்டிருக்கும் தேசிய கீதத்தின் காலடியில் சமர்ப்பித்து விடுவார்கள் .
கோமதிகள் போட்டிகளுக்காக ஓட ஆரம்பித்தவர்களல்ல...
அவர்களை,
பசி துரத்துகிறது
ஊட்டச்சத்துக் குறைபாடு துரத்துகிறது
தந்தையின் இயலாமை துரத்துகிறது
தாயின் பயம் துரத்துகிறது
ஆசிரியர்களின் கேலி துரத்துகிறது
ஊராரின் அவநம்பிக்கை துரத்துகிறது
சாதி துரத்துகிறது
ஆண்திமிர் துரத்துகிறது
சமூகத்தின் பாரபட்சம் துரத்துகிறது
ஊடகங்களின் புறக்கணிப்பு துரத்துகிறது
பயிற்சியாளர்களின் அலட்சியம் துரத்துகிறது
தேர்வுக் குழுவின் அரசியல் துரத்துகிறது
வெள்ளை நிறத்தைத் தரமுடியாத மரபணு துரத்துகிறது
நம்பிக்கை அளிக்க முடியாத எதிர்காலம் துரத்துகிறது.
கோமதிகள் ஓடுகிறார்கள்....விழுந்து விடக் கூடாது என்பதற்காக ஓடுகிறார்கள்...நின்று விட்டால் அழுது விடுவோம் என்பதற்காக ஓடுகிறார்கள்....ஓடுவதைத் தவிர வேறு வழியே இல்லாததால் ஓடுகிறார்கள்....ஓட்டம் நின்று விட்டால் மூச்சும் நின்று விடுமோ என்கிற பயத்தில் ஓடுகிறார்கள்...தான் சந்திந்த அவமதிப்புகளை , புறக்கணிப்புகளை மைதானமாக விரித்து அவற்றைக் கால்களால் மிதிக்கிற கற்பனையில் ஓடுகிறார்கள்...ஓடி முடித்த பின் பருகக் கிடைக்கும் பழச்சாறிலோ , நீரிலோ துளியளவு கருணை இருந்து விடாதா ? என்கிற எதிர்பார்ப்பில் ஓடுகிறார்கள் .
எல்லைக் கோட்டைத் தொட்ட போது தமிழகமும், இந்தியாவும், உலகமும் என்ன நினைத்ததோ ? கோமதி இப்படித்தான் நினைத்திருப்பாள் . ' இனி எதற்கும் பயந்து ஓட வேண்டியதில்லை .'
கோமதிக்குக் கிடைத்திருப்பது தங்கம் அல்ல; இனி ஒருபோதும் தகர்க்கவே முடியாத தன்னம்பிக்கை.
நம் வீடுகளில், தெருக்களில், பள்ளிகளில் இருக்கும் கோமதிகளுக்கு அதை நம்மாலும் தரமுடியும்.
அதுதான் இந்தக் கோமதிக்கான நிஜமான கைதட்டல்.
வாழ்த்துகள்!

No comments:

Post a Comment